Skip to content

விதைநெல்லைச் சேமித்து வைக்கும் நுட்பம்!

விதைநெல்லைச் சேமிக்கும்போது அதன் ஈரப்பதம் மிகவும் முக்கியம். ஈரப்பதம் கூடினாலும் குறைந்தாலும் அதன் முளைப்புத்தன்மை பாதிக்கப்படும். ஆகையால் விதையைச் சேமிக்கும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
விதைநெல்லை சூரியஒளியில் உலர்த்துவதில்தான் நுணுக்கம் உள்ளது. காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையில் களத்தில் கொட்டி மூன்று நாட்களுக்கு உலர்த்த வேண்டும். நெல்லை கால்களால் தள்ளியபடி உலர்த்தும்போது சலசலவென்று சத்தம் கேட்கும். கைகளில் அள்ளிவைத்து திருகி பார்த்தால் எளிதாக தோல் உரியும். அரிசியை வாயில் வைத்து கடித்தால் கடுக்கென்று சத்தம் கேட்கும். இந்த அறிகுறிகளை வைத்து நெல் 12% ஈரப்பதத்துடன் உள்ளது என்று தெரிந்துகொள்ளலாம். இந்தளவு ஈரப்பதம் இருந்தால் விதையின் முளைப்புத்திறன் 80% அளவுக்கு இருக்கும்.
சேமிக்கும்போது வேப்பிலை, வசம்புதூள் ஆகியவற்றை பயன்படுத்தினால் பூச்சிகள் தாக்காது. விதை மூட்டைகளை நேரடியாக தரையில் வைத்தால் பூமியின் ஈரப்பதம் விதைகளில் பரவ வாய்ப்பு உண்டு. பலகை, கற்கள் ஆகியவற்றின் மீதுதான் விதை மூட்டைகளை அடுக்கி வைக்க வேண்டும். இப்படி சேமித்த விதையை 12 மாதங்களுக்குள் பயன்படுத்துவது சிறந்தது.
எ.செந்தமிழ்,
வேளாண் இளங்கலை மாணவர்
அக்ரிசக்தி – விழுது மாணவ பத்திரிக்கையாளர் திட்டம்

Leave a Reply

error: Content is protected !!