1. பசுமாட்டு கோமியம் – 4 லிட்டர் – பயிர் வளர்ச்சிக்கு தேவையான (நைட்ரஜன்) தழைச்சத்துக்கள்
2. பசும்பால் – 3 லிட்டர் – புரதம்,கொழுப்பு, மாவு அமினோஅமிலம், கால்சியம் சத்துக்கள்
3. நன்கு புளித்த தயிர் – 2 லிட்டர் -ஜீரணிக்கத்தக்க செரிமானத் தன்மையை தரவல்ல நுண்ணுயிரிகள் (லேக்டோபேஸில்லஸ்)
4. பசுமாட்டு நெய் – அரை லிட்டர் – வைட்டமின்-ஏ, -வைட்டமின்பி, கால்சியம், கொழுப்புகள்
5. இளநீர் -2 – சைட்டோசைனின் எனும் வளர்ச்சி ஊக்கி மற்றும் அனைத்து வகை தாதுக்கள் (மினரல்ஸ்)
6. வாழைப்பழம் – 12 – நொதிப்புநிலை தரவல்லதாகும். அதிக நுண்ணூட்டம் பெறுகின்றது
7. சுண்ணாம்பு – சிறிதளவு
8. நம்முடைய நிலத்தின் மண் கொஞ்சம்
9. நாட்டுச் சர்க்கரை அரைக்கிலோ
பச்சை பசு சாணி, பசு மாட்டு நெய் கலந்து பிசைந்து ஒரு பிளாஸ்டிக் வாளியில் 3 நாட்கள் வைக்கவும் தினம் ஒரு முறை இதை பிசைந்து விடவும்.
நான்காவது நாள் மற்ற பொருட்களுடன் இவைகளை ஒரு வாயகன்ற மண்பானை, சிமெண்டுத் தொட்டி அல்லது டிரமில் போட்டுக் கையால் நன்கு கரைத்து, கலக்கி, கம்பி வலையால் வாயை மூடி நிழலில் வைக்கவும்.
தினம் இரு வேளை காலை, மாலை பல முறை நன்கு கலக்கி விடவும். அதிகம் கலக்கினால் கலவைக்கு அதிகக் காற்றோட்டம் ஏற்பட்டு நுண்ணுயிர்கள் அபரிவிதமாகப் பெருகி மிகுந்த பலன் கொடுக்கும்.
இப்படி 20 நாட்கள் கலக்கி வந்தால் பஞ்சகவ்யா கரைசல் தயாராகி விடும்.
இதை ஆறு மாதம் வரை தினமும் கலக்கி விட்டு, கெடாமல் வைத்துப் பயன்படுத்தலாம். தண்ணீர் குறைந்து கலவை கெட்டியானால் மீண்டும் போதிய அளவு தண்ணீர் சேர்த்து கலக்கினால் கலவைக்கு அதிக பலன் உண்டு. இந்த பஞ்சகவ்யவை உபயோகம் செய்யலாம் 30- 50 லிட்டர் நீரில் இந்த கலவையில் ஒரு லிட்டர் சேர்க்கலாம். (பயிர் வளர்ச்சி ஊக்கியாகவும்,) நிலத்தில் தண்ணீர் பாயும் நேரமும் ஊற்ற வேண்டும்.
இவற்றை 50 லிட்டர் தண்ணீருக்கு ஒரு லிட்டர் பஞ்சகவ்யா என்ற விகிதத்தில் கலந்து தொழுவுரத்தில் ஊற்றி மதிப்பூட்டல் செய்து பயிருக்கு போடலாம். நுண்ணுயிரிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதோடு பயிர் வளர்சி நன்றாக இருக்கும் இவற்றை பயிருக்கு 10 லிட்டர் தண்ணீருக்கு 200 மில்லி என்ற விகிதத்தில் அடித்தால் பூச்சி நோய் தாக்கம் இருக்காது.
நன்றி
என். மதுபாலன், B.sc (Agri),
இயற்கை வேளாண்மை ஆலோசகர்,
தர்மபுரி.
மேலும் செய்திகளுக்கு
https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral
விளம்பரம்
“அனைவருக்கும் இலவச இணையதளம்” என்ற திட்டத்தின் கீழ்
கிருஷ்ணகிரியை சேர்ந்த Clouds India நிறுவனம் வழங்குகிறது “இலவச இணையதள இடம்”
ஆம்,
“சொந்த இணையதளம் உலகையே சொந்தமாக்கும்”
மேலும் விபரங்களுக்கு
https://cloudsindia.in/
Mobile No : 9943094945
நேரடியாக பதிவு செய்ய
https://goo.gl/w5HlKV
இந்த சலுகையை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள்..


