Site icon Vivasayam | விவசாயம்

அமுதக்கரைசல் தயாரிப்பு முறை!

அமுதக்கரைசல்.. இதை ‘நிலவள ஊக்கி’ என்றும் சொல்கிறார்கள். இதை நிலத்தில் தெளித்ததும், 24 மணி நேரத்தில் நுண்ணுயிரிகள் பெருகும். பயிர்கள் நோய், நொடியில்லாமல் வளர உதவும். பொதுவாக 15 நாட்களுக்கு ஒரு தடவை இந்தக் கரைசலைக் கொடுக்கலாம். பயிர்கள் மிகவும் வாட்டமாக காணப்பட்டால் வாரம் ஒரு முறை கூட கொடுக்கலாம். வசதியிருந்தால், தண்ணீர் பாய்ச்சும் போதெல்லாம் அதனுடன் கலந்துவிடலாம்.

தயாரிப்பு முறை..

மாடு ஒரு தடவை போட்ட சாணம் (எந்த மாடாக இருந்தாலும் பயன்படுத்தலாம்), ஒரு தடவை பெய்த மாட்டுச் சிறுநீர் இவற்றை ஒரு பிளாஸ்டிக் வாளியில் எடுத்துக்கொண்டு, அதில் ஒரு கைப்பிடி வெல்லம், ஒரு குடம் தண்ணீர் ஆகியவற்றை சேர்க்கவேண்டும். 24 மணி நேரம் நிழல்பாங்கான இடத்தில் வைக்க வேண்டும். அதன்பிறகு, அமுதக்கரைசல் தயார். ஒரு பங்கு அமுதக்கரைசலுடன் 10 பங்கு தண்ணீர் சேர்த்துப் பயிர்களுக்குத் தெளிக்கலாம். தெளிப்பானில் (டேங்க்) ஒரு முறை தெளிப்பதற்கான அளவு இது. ஒரு ஏக்கருக்கு பத்து தெளிப்பான் (டேங்க்) அளவுக்குத் தெளிக்கவேண்டியிருக்கும். வாய்க்கால் நீரிலும் கலந்து விடலாம்.

நன்றி

பசுமை விகடன்

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral

Exit mobile version