Site icon Vivasayam | விவசாயம்

இயற்கை முறை பந்தல் சாகுபடி

இயற்கை முறையில் பந்தல் காய்கறி சாகுபடி செய்யும் விதம் குறித்து பந்தல் சாகுபடியில் நெடிய அனுபவம் வாய்ந்த கேத்தனூர் பழனிச்சாமியிடம் கேட்டோம். புடலையில் பீர்க்கனை சேர்த்து சாகுபடி செய்றது சரியான முறையில்லை. பீர்க்கனுக்கு அடி சாம்பல், மேல் சாம்பல், வைரஸ்னு பல பிரச்சனை வரும். அது பக்கத்து பயிரையும் பாதிச்சுடும். அதனால பந்தல்ல தனியா ஒரு மூலையில பீர்க்கன் சாகுபடி செய்றதுதான் சரியான முறை.

வைரஸ் நோய்க்கு 250 மில்லி புளிச்ச மோர், 100 கிராம் சூடோமோனஸ், 50 கிராம் கரும்பு சர்க்கரை கலந்து கலக்கி, 10 லிட்டர் தண்ணீரில் கலந்து மூன்று நாள் இடைவெளியில் மூன்று முறை தெளித்தால் வைரஸ் கட்டுப்படும். அதோடு, பூக்கள் பூக்க ஆரம்பித்த பிறகு, 15 நாளைக்கொரு முறை தொடர்ந்து மூலிகைப் பூச்சிவிரட்டி தெளித்தாலே பெரும்பாலான பூச்சித் தாக்குதல்கள் இருக்காது.

நன்றி

பசுமை விகடன்

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral

Exit mobile version