Skip to content

கார்பனை அதிக அளவு வைத்திருப்பது மண் மற்றும் நீரோடைகள்

பூமியில் உள்ள கார்பன்-டை-ஆக்சைடை கட்டுப்படுத்தும் ஆற்றல் காடுக்களுக்குதான் அதிகம் என்று நாம் இன்று வரை நினைத்திருக்கிறோம். ஆனால் உண்மை அதுவல்ல. பெரும்பாலாக co2 -கட்டுப்படுத்தும் ஆற்றல் மண், ஆறுகள், நீராவியாதல் ஆகியவற்றிற்கே உள்ளது என்று தற்போது அறிவியல் அறிஞர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இதனை பற்றி மேலும் தெரிந்துக்கொள்ள நடத்தப்பட்ட ஆய்வில் நீரோடைகள், எரிகள், அதிக அளவில் co2 வை கட்டுப்படுத்துகிறது என்பது தெரிய வந்துள்ளது என்று முன்னணி எழுத்தாளர் டேவிட் Butman மற்றும் சுற்றுச்சூழல் வன அறிவியல் பள்ளி  உதவி பேராசிரியர் கூறினார்கள்.

கார்பன் தற்போது அதிக அளவில் ஆறுகள் மூலம் சேமிக்கப்படுகிறது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். 30% கார்பன் மண்ணில்தான் சேமிக்கப்படுகிறது. பசிபிக்கின் வடமேற்கு பகுதிகளில்தான்  அதிக அளவு ஒவ்வொரு ஆண்டும் வேகமாக மற்ற பகுதிகளை விட இயற்கை மூலம், கார்பன்  நகருவது  கண்டறியப்பட்டது. இந்த புதிய ஆய்வு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கலாம்.

http://www.sciencedaily.com/releases/2015/12/151221193524.htm

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli

Leave a Reply