Site icon Vivasayam | விவசாயம்

வளரும் நாடுகளில் புதிய வகை விவசாய புரட்சியா!

தற்போதைய தொழில்நுட்பத்தின்படி மண்ணின் தரத்தை உயர்த்துவதற்கு ஒட்டுண்ணி நூற்புழுக்களுக்கு எதிராக புதிய முறையினை இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்து உள்ளனர். இதற்காக ஆராய்ச்சியாளர்கள் மண்ணின் தரத்தை மேம்படுத்த ஆண்டுதோறும் சுமார் £100 பில்லியன் அளவு பணத்தை செலவிடுகின்றனர். இதற்கு முக்கிய காரணம் மண்ணின் தரத்தை கெடுக்கும் புழுக்களை அழித்து, நன்மை தரும் புழுக்களின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என்பதேயாகும். மண்ணின் தரம் தற்போது குறைவாக இருப்பதால் 12.3% பயிர் உற்பத்தி முந்தைய ஆண்டை விட குறைந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

தற்போது புரதகூறு போன்று தோற்றமளிக்கும் ஒட்டுண்ணி வகை புழுக்களை பற்றி ஆராய்ச்சி செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆராய்ச்சியில் உண்மையான மண் ஒட்டுண்ணிகள் பற்றிய வேதியியல் பதிப்புகள் பற்றி ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த வகை ஆராய்ச்சியினை மேற்கொள்ள சுமார் 1 மில்லியன் பணம் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை மற்றும் பெல்ஃபாஸ்ட் அபிவிருத்தி அமைப்பு வழங்கி உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

ஆராய்ச்சியாளர்கள் புதிதாக கண்டறிந்த நன்மை ஒட்டுண்ணி புழுக்களை கொண்டு மண்ணின் தரத்தை உயர்த்தி அதன் மூலம் வாழை உற்பத்தியை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளனர். இந்த முயற்சி மற்ற பயிர்வகைகளுக்கு படிப்படியாக உபயோகப்படுத்தப்படும் என்றும் கூறினர். ஆராய்ச்சியாளர்கள் முதலில் 130 நாடுகளில் இந்த வகை ஒட்டுண்ணி புழுக்களை பயன்படுத்தி விவசாயம் செய்ய உள்ளதாக கூறுகின்றனர். இதன் மூலம் உலக விவசாயத்தில் இங்கிலாந்து எட்டாவது இடத்தை பிடிக்க போவதாக கூறியுள்ளனர். பெரும்பாலும் பழங்கள் வளரும் நாடுகளில் குறைந்த அளவே உற்பத்தி செய்யப்படுகிறது. அதனை ஈடுகட்ட தற்போது ஆராய்சியாளர்கள் பல்வேறு வகையான புதிய திட்டத்தினை மேற்கொண்டு வருகின்றார்கள். இதன் மூலம் பல்வேறு வகையான பயிர்களை பயிரிட்டு உற்பத்தியை பெருக்க உள்ளதாக கூறுகின்றனர்.

இந்த வகை புதிய ஆராய்ச்சி திட்டம் ஒட்டுண்ணி நூற்புழுக்களை பற்றி ஏற்கனவே ஆராய்ச்சி மேற்கொண்ட திட்டத்திற்கு இது பெரிதும் உதவியாக இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். உலக உணவு பாதுகாப்பு  குயின்ஸ் நிறுவன ஆராய்ச்சியாளரான ஜனாதன் டால்சில் கூறியதாவது “எங்கள் நோக்கம் இந்த புதிய ஒட்டுண்ணி  அணுகுமுறையை பயன்படுத்தி விவசாய உற்பத்தியை பெருக்க வேண்டும்” என்பதாகும்.

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli

Exit mobile version