தெர்மினலியா அர்ஜூனா ( மருத மரம்) 20-25 மீட்டர் உயரம் வரை வளரும். இந்த மரம் இந்தியாவில் வளர கூடிய மரமாகும். இந்த மரத்தில் உள்ள மலர்கள் வெளிர் மஞ்சள் நிறத்தில் இருக்கும். இலை கூம்பு வடிவத்தில் பச்சை நிறமாக இருக்கும். ஆனால், இறுதியில் பழுப்பு நிறத்தில் இருக்கும். செப்டம்பர் மற்றும் நவம்பர் மாதங்களுக்கு இடையே இந்த மரத்தில் கனி விடும். ஆகஸ்ட் மற்றும் ஜூன் பருவமழையின் போது மலர்கள் காணப்படும்.
அர்ஜூனா ( மருத மரம்) ஊட்டச்சத்து பண்புகள்:
அர்ஜூனா மரத்தின் மரப்பட்டையில் ஊட்டச்சத்து அதிகமாக இருப்பதால் முலிகைக்காக பயன்படுத்துகிறார்கள். கோ-என்சைம் கே -10, டான்னிக் அமிலம், ஃபிளாவனாய்டுகளில் மெக்னீசியம், துத்தநாகம், தாமிரம் மற்றும் கால்சியம் போன்ற கனிமங்கள் அதிகமாக உள்ளன.
அர்ஜூனா மரத்தின் சுகாதார நன்மைகள் மற்றும் மருத்துவ பயன்கள்:
- ஆஸ்துமா பிரச்சனையை தீர்க்க இந்த அர்ஜூனா மரம் மிகவும் உதவியாக இருக்கிறது. ஆஸ்துமா இயற்கை சிகிச்சையின் ஒரு பகுதியாக, அர்ஜூனா மரத்தின் பட்டையை தூள் செய்து சூடான தண்ணீர் அல்லது பாலில் கலந்து தேநீர் வடிவில் உட்கொள்ள வேண்டும். அவ்வாறு செய்வது ஆஸ்துமா போன்ற பிரச்சனைகளுக்கு முழுமையான தீர்வாக இருக்கும்.
- அர்ஜூனா மரத்தின் பட்டையில் அதிகமான நோயெதிர்ப்பு சக்தி அடங்கியுள்ளது. அதுமட்டுமல்லாது, தோல்களுக்கு இந்த மரத்தின் பட்டை மிகவும் உதவியாக இருக்கிறது.
- சிறுநீரகத்தில் உருவான கல் கரைய , அர்ஜூனா பட்டையை நன்கு வேகவைத்து வடிக்கட்டி பருக வேண்டும் . இவ்வாறு செய்தால் சிறுநீரகத்தில் உள்ள கல் சிறுநீர் வழியாக வெளியேறி விடும்.
- இந்த அர்ஜூனா பட்டை மூலம் இதய நோய் வருவதையும் தடுக்கலாம்.
- அர்ஜூனா பட்டயை தேநீராக குடிக்கும் போது உடலில் உள்ள கொழுப்பை கட்டுப்படுத்துகிறது. அதனால் இதயம் சம்பந்தப்பட்ட நோய் வராமல் தடுக்கிறது.
http://www.home-remedies-for-you.com/herbs/arjuna.html
மேலும் செய்திகளுக்கு
https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli






Om nama sivaya
மருத மரத்தை ஏன் அர்ஜுனா என்கிறீர்கள், மருதம் என்றே குறிப்பிடவும்