Vivasayam | விவசாயம்

டிரைக்கோடெர்மா (உயிர் எதிர் கொல்லி) பயன்பாடு

டிரைக்கோடெர்மா என்ற பேரினத்தில் வெவ்வேறுவகை சிற்றினங்களான டி, விரிடி, டி ஹார்சியானம் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இது பயிர் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சியைத் தூண்டுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

3

காய்கறி பயிர்கள் – நாற்றழுகல் மற்றும் நாற்று கருகல்

விதை நேர்த்தி

காய்கறி பயிர்களான தக்காளி, கத்தரி, மிளகாய், பாகற்காய் மற்றும் பூசணி பயிர்களில் தோன்றும் நாற்றழுகல் மற்றும் நாற்று கருகல் நோயைக் கட்டுப்படுத்துவதற்கு ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் டிரைக்கோடெர்மா பூசண கலவையை கலந்து பின்னர் விதைக்க வேண்டும்.

காய்கறிப் பயிர்கள் – வேரழுகல் மற்றும் வாடல் நோய்

ஒரு எக்டருக்கு 2.5 கிலோ டிரைக்கோடெர்மா கலவையை 50 கிலோ நன்கு மக்கிய சாண எரு அல்லது மணலுடன் கலந்து விதைப்பதற்கு முன்பு நிலத்தில் இடவேண்டும்.

நாற்று நனைத்தல்

டிரைகோடெர்மா பூசண கலவை 2.5 கிலோவை தேவையான அளவு தண்ணீரில் கலந்து ஒரு எக்டருக்குத் தேவையான நாற்றுகளை அந்த கலவையில் குறைந்தது 30 நிமிடம் நனைத்து பின்னர் நடவேண்டும்.

மஞ்சள் கிழங்கு அழுகல்

மஞ்சள் கிழங்கு விதையுடன் 4 கிராம் டிரக்கோடெர்மா விரிடியை கலந்து விதைக்க வேண்டும்.

வயலில் இடுதல்

ஒரு எக்டருக்கு 2.5 கிலோ டிரைக்கோடெர்மா பூசண கலவையை 50 கிலோ நன்கு மக்கிய சாண எரு அல்லது மணலுடன் கலந்து நடுவதற்கு முன் நிலத்தில் இடவேண்டும்.

கவனிக்க வேண்டியவை

  • டிரைக்கோடெர்மா பற்றிய பயிற்சி பல்கலைக் கழகத்தில் நோயியல் துறையில் தேவையின் அடைப்படையில் கொடுக்கப்படுகிறது.
  • டிரைகோடெர்மா பூசண கலவையை மற்ற பூசணக் கொல்லிகள் மற்றும் பூச்சிக் கொல்லி மருந்துடன் கலத்தல் கூடாது.
  • இந்த பூசணக் கலவையை தயாரித்த நான்கு மாதங்களுக்குள் பயன்படுத்த வேண்டும்.
  • இந்த பூசண கலவையை மற்ற உயிர் உரங்களுடன் கலந்து இடலாம்.
  • இந்த பூசணம் சில பூச்சிகளை மட்டுமே கட்டுப்படுத்தும்.

பயன்கள்

  • இது ஒரு சிக்கனமான முறை
  • இது பயிர்களின் வளர்ச்சி மற்றும் மகசூலை அதிகரிக்கச் செய்கிறது.
  • இது விதை மற்றும் மண் மூலம் பரவும் பூசணத்தைக் கட்டுப்படுத்துகிறது.
  • இது பயிகளின் நோய் எதிர்ப்புத்திறனை அதிகரிக்கச் செய்கிறது.
  • இது மண்ணிலுள்ள கனிம பொருட்களைப் பயன்படுத்தி பல மடங்காக பெருகி செடிகளுக்கு பாதுகாப்பை நீண்ட காலத்திற்கு தருகிறது.
  • இது இதர உயிரினங்களுக்கும் தோட்டத்தில் உள்ள மண்புழுக்களுக்கும் தீமை விளைவிப்பதில்லை.

நன்றி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கழைக்கழகம்.

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli

Exit mobile version