Skip to content

வேளாண் பல்கலையில் மாடித்தோட்டம் அமைக்க பயிற்சி

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் தகவல் மற்றும் பயிற்சிமையம் சார்பில், பொதுமக்கள், இல்லத்தரசிகள் வீட்டிலிருந்தபடியே சிறு சிறு தொழில்கள் செய்ய வாரந்தோறும் பல்வேறு பயிற்சிகளை அளிக்கிறது. அதன்படி, வரும் 17ம் தேதி வீட்டுத்தோட்டம் அமைப்பது குறித்த ஒருநாள் பயிற்சி அளிக்கிறது. நேரம் காலை 9.30 மணிமுதல் மாலை 4.30 மணிவரை. கட்டணம் ரூ.400. மகளிர் குழுவை சேர்ந்தவர்களுக்கு ரூ.300, பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ரூ.200ம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

மதியஉணவும், தயாரிப்புப் பொருட்களும் வழங்கப்படும். பயிற்சி பெறுபவர்களுக்கு தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் சார்பில் சான்றிதழ் வழங்கப்படும். இந்த சான்றிதழ் மூலம் வங்கியில் கடன்பெற்று சிறுதொழில் தொடங்கலாம். முன்பதிவு அவசியம். மேலும் விவரங்களுக்கு, எண்: u&30, 10வது தெரு, அண்ணா நகர் (ஜெயகோபால் கரோடியா பள்ளி பின்புறம்).

                                                                                                               நன்றி

                                                                                                            தினகரன்

Leave a Reply