நெல்லிக்காய் மருத்துவ பலன்கள் ( அலோபதி- சித்த மருத்துவம் )

அலோபதி மருத்துவ பயன்கள் Boost Immunity எனப்படும் நோய் தடுப்பாற்றல் அதிகமாக இருக்கிறது. காரணம் இதில் மற்ற கனிகளில் இல்லாத அளவிற்கு விட்டமின் சி மற்றும் விட்டமின் ஏ, அல்கலாய்டுஸ், flavonoids, quercetin Kaempferol என்ற வேதிப்பொருட்கள், வெள்ளை அணுக்களை ஊக்குவித்து வெளி புறத்தில் இருக்கும் நஞ்சு மற்றும் இரத்தத்தில் இருக்கும் நஞ்சுகளை எதிர்த்து போராடும் தன்மையுடையதாக இக்கனி விளங்குகிறது

இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துகிறது. இன்சுலின் சுரக்கும் செல்களை ஒழுங்குபடுத்துகிறது, வளர்ச்சிதை மாற்றம் சரி செய்யவும் , எல்டிஎல் கொழுப்பை குறைக்கவும் உதவுகிறது நெல்லிில் உள்ள குரோமியம் இருத துடிப்பை ஒழுங்குபடுத்தவும், இருதய குழாயில் அடைப்பு ஏற்படாமல் தடுக்கவும் பயன்படுகிறது

நெல்லியில் அதிகமான நார்சத்து உள்ளதால் குடல் இயக்கத்தினை ஒழுங்குபடுத்தி மலச்சிக்கலை தீர்க்கிறது குடல்களில் இருக்கும் இரணங்களை சீர் செய்கிறது உடலில் இருக்கும் அதிகமான கழிவு, நஞ்சுகளை (Salt & Uric Acid.Toxins ) களை வெளியேற்றி Diuretic ஆக செயல்படுகிறது

கல்லீரல் கல்லீீிரலில் இருக்கும் சுரப்பிகளை ஒழுங்குபடுத்தி கல்லீரலை பலப்படுத்துகிறது, மேலும் கல்லீரலில் தங்கும் இருக்கும் நச்சுப்பொருட்களை , டாக்சின்களையும், வெளியேற்ற உதவுகிறது, இதற்கு நெல்லிக்காயில் உள்ள Phytochemicals, Quercetin,Gallic Acid, corilagin, ellagic acid சத்துகள் உதவுகின்றன

வயோதிகத்தை தள்ளிப்போடுதல் – Anti Aging இதில் இருக்கும் Hyper lipidemia, Free Radicals & Antoxidant Qualities, Vitamin C போன்றவை இருப்பதால் சோல் சுருக்கங்கள், முகத்தில் ஏற்படும் கொப்பளங்கள், புள்ளிகள் , வளர்ச்சிதை மாற்றங்களை சரி செய்து வயோதிகத்தை தள்ளிப்போடுகிறது

உண்ணும் முறை காலை ஒரு நெல்லிக்காய், இரவில் ஒரு நெல்லிக்காய் தினமும் உண்டுவரலாம் நெல்லிபவுடர், நெல்லி முல்லி( காய்ந்த நெல்லி) தினமும் காலை, மாலை 5 கிராம் உண்டு வரலாம் மருத்துவர் பாலாஜி கனகசபை, MBBS,. PhD அரசு மருத்துவர்  | 99429-22002 நெல்லிக்காய் பவுடர், திரிபலா சுரணம் இரண்டும் அக்ரிசக்தி அங்காடியில் கிடைக்கும் , மேலும் விபரங்களுக்கு  அக்ரிசக்தி 9940764680