“என் கடன் மண் வளம் காப்பதே” என்ற
கடமையுடன் தோன்றிய மண்புழுக்களை
மண்ணியல் வல்லுனர்கள் மண்புழுக்களின்
செயல்பாடு மற்றும் பண்புகளை
கண்டறிந்து அவற்றை ‘பூமியின் குடல்கள்’
என்று வர்ணித்துள்ளனர் . மண்ணின்
மைந்தன், உழவனின் நண்பன், நிலத்தின்
வேர்கள் என்றெல்லாம் அழைக்கப்படும்
மண்புழுக்களை மரபியலின் தந்தையான
சார்லஸ் டார்வின் முதன் முதலாக விஞ்ஞான
பூர்வமாக ஆராய்ந்து 1881-ம் ஆண்டு
‘மண்புழுக்களின் செயல்பாட்டால் பயிருணவு
உருவாக்கம்’ என்ற தலைப்பில் ஒரு ஆராய்ச்சித்
தொகுப்பினை வெளியிட்டார். மண்புழு உரமானது பயிருக்குத் தேவையான அனைத்து
ஊட்டச்சத்துக்கள் நிறைந்த திட்டமிட்ட
பரிபூரண உணவு என்றும் கூறியுள்ளார்.
மண்புழு உரம் தயாரிப்பு
மண்புழு உரம் உற்பத்தி செய்வதை மூன்று
பகுதிகளாக பிரிக்கலாம். முதல் பகுதியில்
மண்புழு உரம் தயாரிப்பதற்கு தேவையான
மண்புழுக்கள், பண்ணைக் கழிவுகள் மற்றும்
பயிர்க் கழிவுகளை சேகரித்து உணவுக்கலவை
தயாரித்தல். இரண்டாம் பகுதியில் உணவு
அடுக்குகளை அமைத்து மண்புழு உரம்
தயாரித்தல் மற்றும் சேகரித்தல். மூன்றாம்
பகுதியில் உற்பத்தி செய்யப்பட்ட மண்புழு
உரத்தை சேமித்தல் மற்றும் பாதுகாத்தல்.
#விவசாயம்
மேலும் தகவல்களுக்கு…
https://www.vivasayam.org/wp-content/uploads/2022/01/56-ISSUE-AGRISAKTHI_mobile_28-1-2022.pdf விவசாயம்
பற்றிய அனைத்து தகவல்களையும் அறிந்துகொள்ள….
விவசாயம் செயலியை இன்றே தங்களின் கைப்பேசியில் பதிவிறக்கம் செய்துகொள்ள
https://play.google.com/store/apps/details?id=com.Aapp.vivasayamintamil