Site icon Vivasayam | விவசாயம்

தான் அமிழ்தம் என்றுணரற் பாற்று… (பகுதி-8)

பசும்புல் தலை காண்பது அரிது….

“மண்ணிற்கு மழை ஒன்றே தாயின் பாலாம்” இது ஒரு கவிஞனின் வரி. இந்தியாவில் உள்ள விளைநிலங்களில் மழையை நம்பி இருக்கும் புன்செய் நிலம் தான் அதிகம். பாசனத்திற்கான ஆறு, குளம், குட்டை, ஏரி, கிணறு இவற்றிற்கான மூலமும் அதே மழை தான். அதனாலேயே மழையைத் தாய்ப் பாலோடு நம் தமிழ் கவிஞர்கள் ஒப்பிடுகின்றனர். அப்படிப்பட்ட மழையும் மழை பொழிவுக்கும் பல வேறுபாடுகள் பல வகைகள் இருக்கின்றன, அவற்றை இதில் அறியலாம்.

மழை

ஆங்கிலத்தில் வானில் இருந்து வரும் நீரின் எல்லா வடிவங்களையும் பொதுவாக precipitation என்று அழைப்பர்.  அதில் 0.5 மி.மீ அடர்த்தி கொண்ட மழைத்துளிகளை மழை என்று கருதப்படுகின்றன. இவை தொடர்ந்து பொழிந்தால் அடைமழை என்றும்  அதிகப்படியான மழைத்துளி பொழிந்தால் கனமழை என்றும் குறிப்பிடுகின்றனர்.

 பணி

இது நீரின் திட வடிவம் எனினும் மிகவும் திடமில்லாமல் நுரைக்கு நிகராய் இருக்கும் உயரத்தில் இருக்கும். நீராவி குளிர்ந்து பணி திவலைகள் நிலத்தில் விழும் இதையே ஆங்கிலத்தில் SNOW என்பர். உலகிலேயே அதிக பனிப்பொழிவு நடக்கும் இடம் அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன்  மாகாணம் ஆகும். இங்கு ஆண்டுக்கு  641 இன்சஸ் பனி பொழியும்.

ஆலங்கட்டி மழை

இதனை ஆங்கிலத்தில்  இரண்டாகப் பிரிக்கின்றனர். பனிக் கட்டிகளாக இருந்து மண்ணில் விழ விழ கரைபவை SLEET என்றும் பனிக்கட்டிகளாக இருந்து  மண்ணில் பனிக்கட்டிகள் ஆகவே விழுவதை HAIL என்றும் அழைக்கின்றனர். இன்னும் SLEET  ஆலங்கட்டி மழையை விட HAIL  மழையில் விழும் பனிக்கட்டியின் அடர்த்தி அதிகமாகும். 1986இல் பங்களாதேஷில் கோகுல் கான் என்னும் மாவட்டத்தில் பெய்த ஆலங்கட்டி மழை உலகில் அதிக அடர்த்தி கொண்ட( ஒரு கிலோ ஆகும் !! ) ஆலங்கட்டிமழையாகும்.

இவை மழைகளின் மழையின் வகைகள் ஆகும். இதை தாண்டி நம் அறிஞர்கள் மழை பொழிவையும் வெவ்வேறாக பிரிக்கின்றனர். அவை,

கோடை மழை

இயல்பாய் நீராவியாகி மேலெழுந்து அந்த நீராவி குளிர்ந்து மீண்டும் மண்ணில் மழை பொழிவதை கோடை மழை என்கின்றனர். இப்படிப்பட்ட மழை கோடை காலத்தில் அதிகம் பொழிவதால் இப்பெயர் பெற்றுள்ளது. கோடை காலத்தில் வெப்பம் அதிகம் இருப்பதால் நிலத்திலிருந்து நீராவி அதிகம் உறிஞ்சப்படும் ஈக்குவேடார் பகுதிகளில் இந்தக் கோடை மழை அதிகம் பொழியும் இதை ஆங்கிலத்தில் CONVENTIONAL RAINFALL என்கின்றனர்.

மலை அமைப்புசார் மழை

ஈரப்பதம் அதிகம் நிறைந்த காற்று கிடைமட்டமாக வீசும்பொழுது எதிரில் மலைகள் இருப்பின் அவற்றுடன் மோதி அவை மேல்நோக்கி செல்லும். இவை கட்டாயம் மேல் நோக்கி செல்லுதல் என்பர் (forced upward movement.) இவ்வாறு செல்லப்படும் காற்று  குறிப்பிட்ட  உயர்வுக்கு மேல் தான் கொண்டிருக்கும் ஈரப்பதத்தை தாங்கிக் கொள்ளாது. எனவே அவற்றை அது மழையாக பொழிந்துவிடும். இதனை  மலை அமைப்பு சார் மழை என்பர் ஆங்கிலத்தில் OROGRAPHIC RAINFALL என்று குறிப்பிடுகின்றனர். இதற்கு உதாரணம் மேற்கு தொடர்ச்சி மலைகளில் மழைப் பொழிவுகள்.

வெப்ப முன்னிலை மழை

இதை மிதவெப்ப மண்டல புயல் என்றும் குறிக்கின்றனர். குளிர்ந்த காற்றும் சூடான காற்றும் ஒன்றோடு ஒன்று மோதும். அவ்வாறு மோதும் இடத்தை முன்னிலை  (frontal)என்று கூறுகின்றனர். இதில் குளிர்ந்த காற்றிற்க்கு எடை அதிகம் என்பதால் அவை கீழ் நோக்கி செல்லும் வெப்பக்காற்று மேல் நோக்கிச் செல்லும். இவ்வாறு காற்று கட்டாயத்தின் பேரில் மேல் நோக்கிச் செல்வதால் குறிப்பிட்ட பகுதிக்கு மேல் ஈர பதத்தை தாங்கிக்கொள்ள இயலாமல் மழைப் பொழிகின்றது இவையே வெப்ப முன்னிலை மழை என்கின்றனர் ஆங்கிலத்தில் FRONTAL RAINFALL.

பருவமழை

இந்தியா போன்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு பருவமழை தான் ஒரு மிகச்சிறந்த வரமாகும். சூரியனின் வெப்பமும் பூமியின் சுழற்சியும் பூமியில் கிழக்கு நோக்கி வட தென் 30 டிகிரி அச்சரேகையில் காற்றை வீச வைக்கிறது. இவை எல்லா வருடமும் வீசும் ஆனால் பருவத்திற்கு பருவம் இதன் திசை மாறுபடும். இதனால் உண்டாகும் மழையையே பருவமழை என்கின்றனர் (MONSOONAL RAINFALL). இந்தியாவிற்கு தென்மேற்கு பருவமழை (SOUTHWEST MONSOON)  அதிகப்படியான மழை பொழியும் தமிழகத்திற்கு வடகிழக்கு பருவமழை  (NORTH EAST MONSOON) பருவமழை அதிக மழையைக் கொடுக்கின்றது.

எல்லாம் சரி மழை பொழிவதற்கு இப்படி ஒரு காரணி இருந்தும், மழைப்பொழிவு இத்தனை இருந்தும்.. மழை பொழிய ஒரு நுண்ணுயிரி தான் காரணம் என்கின்றனர். உண்மையா!!!!!!!!!

அடுத்த வாரம் பார்ப்போம்…

 

கட்டுரையாளர்: அன்பன் செ. விக்னேஷ், இளநிலை வேளாண்மை பட்டதாரி, குளித்தலை, தொடர்பு எண்: 8344848960, மின்னஞ்சல்: vickysvicky42@gmail.com

Exit mobile version