Site icon Vivasayam | விவசாயம்

விவசாய ஜோதிடம் பகுதி 3 : கதிரறுக்க நல்ல நாள்

இதுவரை
நிழத்தை உழுவும், விதைவிதைக்க நல்ல நாள் எது விவசாய ஜோதிடம் பகுதி 2 : விதை விதைக்க நாற்று நட நாள் என்பதைப் பார்த்தோம்.
அடுத்த நிலத்தை உழுது விதை விதைத்தபின் கதிரறுக்க நல்ல நாள் எப்படி என்பதை பார்ப்போம்
கதிரறுக்க நல்ல நாள்

பெருத்ததொரு கதிரறுக்க நாள்தானப்பா
பிரபலமாந் திங்கள்புதன் வியாழம் வெள்ளி
திருத்தமுள்ள துதிகை திரி திகையினோடு
திரமாம்பஞ் சமிதசமி திரயோதேசி
பொருத்தமுள்ள பூரணை சத் தமிழ் னோடு
பூசமஸ்த மிருகசீரிடம் மோணம்
அருத்தமுள்ள ரேவதிமூன்றுத்தி ரங்கள்
அனுஷம்விசா கம்பரணி யின்னங் கேளே.

இன்னமுமா திரைமகம்ரோ கணிநட் சத்திரம்
இராசிகளில் துலாமிதுனங் கடகம் கன்னி
நன்னயமாய்த் தனுர்மீன மிடபமாகும்
நல்லதொரு சனிபலத்தை நன்றாய்ப் பார்த்துச்
சொன்னதொரு கதிரறுத்துச் சூடு போட்டுச்
சுகங்கொடுக்குந் தேவதைக்குப் பூசை செய்து
முன்னமே சூட்டித்துப் பொலிகள் போட
முக்கியமாய் நெல்லதிக மிருக்கும் பாரே

பொருள்
திங்கள், புதன், வியாழன், வெள்ளி ஆகிய கிழமைகளில்
துதிகை, திரிதிகை, பஞ்சமி, தசமி, திரயோதசி , பவுர்ணமி ஆகிய திதிகளில்
பூசம், அனுசம், மிருகசீரிடம், திருவோணம், உத்திரம், உத்தராடம், உத்திரட்டாதி , ரேவதி, அனுஷம், விசாகம், பரணி, மகம், ரோகிணி ஆகிய நட்சத்திர ராசிகளில் துலாம், மிதுனம், கடகம், கன்னி, தனுசு, மீனம் ஆகிய லக்கினங்களில் சனியின் பலத்தைதப்பார்த்து தேவதைகளை பூஜை செய்து பொலிகள் போட்டு நெற்கதிரிகளை அறுத்தால் நெற்கதிர்கள் அதிகமாய் கிடைக்கும்.

மருத்துவர் பாலாஜி கனகசபை, MBBS., MA (Astro)., PhD
அரசு மருத்துவர்
99429 22002
கிருஷ்ணகிரி மாவட்டம்

Exit mobile version