Site icon Vivasayam | விவசாயம்

எளிய முறையில் ஜீவாமிர்தம் எப்படி தயாரிப்பது?

ஜீவாமிர்தம் எப்படி தயாரிப்பது?

தண்ணீர் 20 லிட்டர், பசு மாடு சாணம் 5 கிலோ, நுண்ணுயிர்
அதிகமுள்ள வளமான மண், நாட்டுப் பசுமாட்டுச் சிறுநீர் – 5 லிட்டர், ஒரு
கைப்பிடி அளவு மண், சுத்தமான சுண்ணாம்பு 50 கிராம் ஆகிய இடுபொருளை எடுத்து சாணத்தை மட்டும் ஒரு சாக்கு அல்லது துணியில் போட்டு ஒரு குச்சியில் கட்டி நீரில்
மிதக்கவிட வேண்டும். பிறகு சாக்கிலுள்ள மாட்டுச்சாணத்தைப் பிழிந்து சாற்றை மட்டும் கலவையில் சேர்க்க வேண்டும். கழிவை அகற்றிவிட வேண்டும். இந்தக்
கலவையைப் பயிர்களுக்கு வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் அளிக்கலாம்.

ஜீவாமிர்தம் எப்படி பயன்படுத்துவது?

தெளிப்புக்காக எடுக்கும்போது கரைசலின் மேற்புறத்தில் இருக்கும் தெளிவை மட்டும் எடுத்து வடிகட்டிப் பயன்படுத்த வேண்டும் .ஒவ்வொரு பயிருக்கும் குறிப்பிட்ட அளவு வடிகட்டிய ஜீவாமிர்தத்தை குறிப்பிட்ட அளவு நீரில் கலந்து தெளிக்க வேண்டும். அதேபோல் காய் பிடிக்கும் சமயத்தில் புளித்தமோர், முளைகட்டிய தானியக் கலவை, தேங்காய்த் தண்ணீர் ஆகியவற்றையும் தெளிக்க வேண்டும். இது அனைத்துப் பயிர்களுக்கும் பொருந்தும் .

Exit mobile version