Site icon Vivasayam | விவசாயம்

நவின கிராமங்கள் ‘ரூர்பன்’ திட்டம் : பா.ஜ., தீவிரம்

நகரப்புறங்களுக்கு இணையான கட்டமைப்பு மற்றும் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்தும் நோக்கில், கடந்த, 3 ஆண்டுக்கு முன் மத்திய அரசு, ரூர்பன் என்ற திட்டத்தை அறிவித்தது.
தமிழகத்தில் கோவை, திருப்பூர், திருவள்ளூர், நெல்லை, சிவகங்கை, மதுரை, காஞ்சிபுரம், தஞ்சை மாவட்டங்களில் உள்ள கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டடன. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு ஊராட்சியை தேர்வு செய்து, அதை சுற்றியுள்ள ஏழு ஊராட்சி களை இணைத்து, ஒரு தொகுப்பாக்கி, இக்கிராமங் களில், நகர்ப்புறங்களுக்கு இணையான வசதிகளை ஏற்படுத்துவதே, இத்திட்டத்தின்நோக்கம்.

இதன் கீழ், சாலை, பாதாள சாக்கடை, அனைவருக்கும் சமையல் வாயு காஸ் இணைப்பு, தட்டுப்பாடில்லாத சுத்திகரிக் கப்பட்ட குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளை உறுதி செய்வது, பசுமை குடியிருப்பு, பசுமை பூங்கா, டிஜிட்டல் லைப்ரரி, வைஃபை வசதி, ஹைடெக் பள்ளிகள், பூங்கா உட்பட பல வசதிகளை ஏற்படுத்த, நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சிகளில் வசிக்கும் இளைஞர்களுக்கு சுய தொழில் திறன் வளர்ப்பு பயிற்சி, நவீன வேளாண் பயிற்சிகளும் வழங்கப் படுகின்றன. வேளாண்,தோட்டக்கலை, கல்வி, மருத்துவம், கால்நடை பராமரிப்பு துறை என, 21 அரசுத்துறைகள் இணைக்கப்பட்டுள்ளன. ஆனால், மாநிலத்தின் பல இடங்களில இத்திட்டம் சரிவர செயல்படவில்லை.

தமிழக அதிகாரிகள் ரூர்பன் திட்டத்தில் நிலுவையில் உள்ள பணிகளை விரைவாக முடிக்கவும், புதிதாக திட்டங்களை வடிவமைத்து, இரண்டு மாதங்களுக்குள் சமர்ப்பிக்க உள்ளனர்

Exit mobile version