Site icon Vivasayam | விவசாயம்

வடகிழக்கு பருவமழை பற்றாக்குறை!?

வடகிழக்கு பருவமழை சீசன் இன்னும், இரு நாட்களில் முடிவுக்கு வர உள்ளது. தமிழகத்தில் அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில், மொத்தம் 437 மி.மீ., மழை பொழியும்; ஆனால், நேற்று வரை, 335 மி.மீ., மட்டுமே மழை பொழிந்துள்ளது.வழக்கமாக பெய்யும் மழையை காட்டிலும், 23 சதவீதம் குறைவான மழையே பெய்துள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டுமே, முந்தைய ஆண்டுகளின் இயல்பு மழையை காட்டிலும் கூடுதல் மழை பொழிந்துள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் இயல்பு மழையே இந்தாண்டும் பெய்துள்ளது. மற்ற, 30 மாவட்டங்களிலும், பற்றாக்குறையான மழையே பொழிந்துள்ளது. சென்னை, தர்மபுரி, கரூர், கிருஷ்ணகிரி, சேலம் மாவட்டங்களில், 50 சதவீதமும், அதற்கு மேலும் பற்றாக்குறையாக மழை பெய்துள்ளது. கோவையில், அக்டோபர் மாதத்தில் பரவலாக மழை கிடைத்தது. ஆனால், நவம்பர், டிசம்பர் மாதங்களில் குறைந்த மழையே பெய்துள்ளது. இயல்பு மழை அளவான, 305 மி.மீ.,க்கு பதிலாக, இந்த பருவத்தில், 217 மி.மீ., மட்டுமே பதிவாகியுள்ளது.

Exit mobile version