Site icon Vivasayam | விவசாயம்

ஊறுகாய்க்கு வரலாறு 4 ஆயிரம் ஆண்டுகள்!

இயற்கை முறையில் மாங்காயை பதப்படுத்தி சாப்பிடுவதற்கு கண்டுபிடித்த முறைதான் ஊறுகாய். மனித நாகரிகம் தோன்றிய காலத்திலிருந்தே ஊறுகாய் பயன்பாட்டில் இருந்து வருவதாக வரலாற்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். ரோம பேரரசு காலத்தில் இமயமலைப் பகுதியில் விளைந்த வெள்ளரிக்காயுடன்  உப்பு சேர்க்கப்பட்ட கலவையை டைபீரியஸ் என்ற மன்னன் சாப்பிட்டிருக்கிறார். இதுவே, ஊறுகாய்க்கான ஆரம்பம் என்று சொல்லப்படுகிறது.

இந்தியாவில் 4 ஆயிரத்து 400 ஆண்டுகளுக்கு முன்பிருந்து ஊறுகாய் பயன்பாட்டில் இருந்து வருவதாகச் சொல்லப்படுகிறது. 1594-ம் ஆண்டில் இந்தியாவில் ஐம்பதுக்கும் மேற்பட்ட ஊறுகாய் வகைகள் இருந்ததாக வரலாற்றியலாளர் ஏ.கே. அச்சய்யா பதிவு செய்திருக்கிறார். மாங்காய், எலுமிச்சையை தவிர இறால் மற்றும் சில மீன் வகைகளிலும் ஊறுகாய் தயாரித்துள்ளனர், நம் முன்னோர்.

ஊறுகாயில் பல ரகங்கள்!

  • ஓட்டுடன், மாங்காய்களை துண்டு துண்டு துண்டாக நறுக்கி தயாருப்பது ஆவக்காய் ஊறுகாய்
  • மாங்காயின் சதைப் பகுதியை மட்டும் துண்டாக நறுக்கி தயாரிப்பது கட் மேங்கோ
  • மாங்காயை தோல் நீக்கி துருவி தயாரிப்பது தொக்கு
  • மாம்பிஞ்சுகளை முழுதாகப் தயாரிப்பது மாவடு
  • மாங்காயை அரைத்து தயாரிப்பது சட்னி

 

நன்றி

பசுமை விகடன்

Exit mobile version