Site icon Vivasayam | விவசாயம்

பூச்சி மேலாண்மை பற்றிய குறிப்புகள்…….

“இயற்கைப் பூச்சிவிரட்டி நல்ல பூச்சிகளை நிலத்திலிருந்து விரட்டாது. பயிருக்கு கெடுதல் செய்யும் பூச்சிகளை மட்டுமே விரட்டும். அதுதான் இயற்கையின் அதிசயம். எந்தப் பயிர் சாகுபடி செய்தாலும், வரப்பில் தட்டைப் பயறு இருக்க வேண்டும். அதற்கு அடுத்ததாக மஞ்சள் நிறப் பூக்கள் உள்ள செடிகள் இருக்க வேண்டும்.  நிலத்தைச் சுற்றிலும் வரப்புகளில் 8 அடி இடைவெளியில் ஆமணக்கு இருக்க வேண்டும்.

வயலின் உள்ளே இரண்டு, மூன்று  இடங்களில் இனக்கவர்ச்சிப் பொறி, விளக்குப்பொறி அமைக்க வேண்டும். இவை, நிலத்தில் இருந்தாலே பூச்சிகளைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை.

இதையும் தாண்டி பூச்சித்தாக்குதல் இருந்தால்….. மூலிகைப் பூச்சிவிரட்டி, வேப்பங்கொட்டை கரைசல், இஞ்சி-பூண்டு-பச்சை மிளகாய் கரைசல் போன்றவற்றின் மூலமாக சுலபமாக கட்டுப்படுத்தி விடலாம்”, என்றார்.

Exit mobile version