Site icon Vivasayam | விவசாயம்

பிரதம மந்திரி பசல் பீமா யோஜனா பயிர் காப்பீட்டுத்திட்டம் பற்றிய விவசாயிகளுக்கு இன்னமும் தெரியவில்லை. ஆய்வறிக்கை

 

2016ம் ஆண்டு விவசாயிகளின் நலனுக்காக பிரதம மந்திரி பசல் பீமா யோஜனா என்ற பயிர் காப்பீட்டு திட்டம் துவங்கப்பட்டது.
இதற்கு முன்பு நடைமுறையில் இருந்த அனைத்து திட்டங்களிலும் உள்ள சிறப்பான கூறுகளைக்கொண்டும், பலவீனமான குறைபாடுகளுள்ள கூறுகளை நீக்கிவிட்டும் இந்த புதிய திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. தற்போது நடைமுறையிலுள்ள தேசிய விவசாய காப்பீட்டுத் திட்டத்தையும், மாற்றம் செய்யப்பட்ட அதன் இன்னொரு வடிவத்தையும் நீக்கிவிட்டு இந்தப் புதிய காப்பீட்டுத் திட்டம் செயல்பாட்டிற்கு வந்துள்ளது.

இத்திட்டத்தின் நோக்கமானது கிீழ்க்கண்ட சிக்கல்களுக்கு பயனளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

1,. இயற்கை இடர்கள், பூச்சிகள், நோய்கள் ஆகியவற்றினால் பயிர்கள் விளையாமல் போகும் நிலையில் விவசாயிகளுக்கு நிதி உதவி அளிக்கவும், காப்பீட்டு வசதியை ஏற்படுத்தி தரவும் இது வந்துள்ளது.

2, விவசாயிகளின் வருமானம் பாதிப்படையாமல் பாதுகாத்து அவர்கள் விவாசயத்தை தொடர்ந்து செய்துவருவதற்கு உதவுகிறது.

3. விவசாயிகள் புதுமையான நவீன வேளாண் நடைமுறைகளை கையாளுவதை ஊக்குவித்தல்.
இத்திட்டத்தின் சிறப்பு அம்சங்கள்

காரிப் பருவப் பயிர்களுக்கு 2%, ரபி பருவப் பயிர்களுக்கு 1.5% என்ற வீதத்தில் ஒரே சீரான காப்பீட்டுக் கட்டணம் விவசாயிகளிடமிருந்து பெறப்படும். ஆண்டுப் பயிர்களான பணப் பயிர்கள், தோட்டடக் கலைப் பயிர்கள் ஆகியவற்றிற்கு 5% காப்பீட்டுக் கட்டணத்தை விவசாயிகள் செலுத்த வேண்டும். விவசாயிகள் செலுத்தும் காப்பீட்டுக் கட்டணம் மிகக் குறைவானவை. எனவே, மீதி கட்டணத்தை அரசாங்கம் செலுத்திவிடும். இயற்கைப் பேரிடர்களால் பயிர் இழப்புகள் ஏற்படும்போது விவசாயிகளுக்கு முழு இழப்பீட்டுத் தொகையும் கிடைக்கும்.

அரசாங்கம் வழங்கக்கூகூய மானியங்களுக்கு உச்சவரம்பு ஏதுமில்லை. காப்பீட்டுக் கட்டண பாக்கி 90% இருந்தாலும்கூட அதை அரசே ஏற்கும்.

இவ்வளவு சிறப்பு வாய்ந்த திட்டம் நாடு முழுதும் உள்ள விவசாயிகளிடையே கொண்டு சேர்க்கப்பட வில்லை என்பது இன்னமும் வருத்தத்துக்கு உரியது. இச் செய்தியை படிக்கும் நண்பர்கள் உடனடியாக தங்கள் ஊரில் உள்ள விவசாயத்துறை அலுவலர்களிடம் கேட்டுப் பெற்று இத்திட்டல் சேர்ந்து பயன்பெறுமாறு அக்ரிசக்தி-விவசாயம் நிர்வாகக்குழு கேட்டுக்கொள்கிறது

Exit mobile version