Site icon Vivasayam | விவசாயம்

ஆடு மற்றும் மாடுகளுக்கு குடற்புழு நீக்கம் குறித்து வேளாண் மாணவிகள் சார்பில் பயிற்சி!

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண்புல இறுதியாண்டு படிக்கும் மாணவிகள் கடலூர் மற்றும் நாகை மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் தங்கி ஊரக வேளாண் பணி குறித்து பயிற்சி பெற்று வருகின்றனர். இதில் விளக்குப்பொறி, விதை நேர்த்தி, அசோலா வளர்ப்பு, மண்புழு உரம் தயாரிப்பு, இயற்கை வேளாண்மை உள்ளிட்ட பல பயிற்சிகளை மாணவிகள் விவசாயிகளுக்கு அளித்து வருகின்றனர்.
இந்த பயிற்சியின் ஒரு கட்டமாக வேளாண்புல ‘ஜி-13’ குழு மாணவிகள் சார்பில் சீர்காழி அருகே உள்ள சந்தப்படுகை கிராமத்தில் ஆடுகள் மற்றும் மாடுகளுக்கு குடற்புழு நீக்கம் செய்வது குறித்து  அங்குள்ள விவசாயிகளுக்கு  செயல் விளக்கப்பயிற்சி அளித்தனர். அதன் முக்கியத்துவம் குறித்து குழு மாணவிகள் விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தார்கள். இதற்கான ஏற்பாடுகளை ‘ஜி-13’ குழு மாணவிகள் செய்திருந்தனர். இதில் கிராமத்தில் உள்ள விவசாயிகள் தங்ககளின் ஆடு மாடுகளுடன் கலந்துக்கொண்டு பயனடைந்தனர்.
Exit mobile version