Site icon Vivasayam | விவசாயம்

அவிநாசியில் ரூ.48 லட்சத்துக்கு பருத்தி வர்த்தகம்!!

அவிநாசியில் நடந்த பருத்தி ஏலத்துக்கு வரத்து திடீரென்று குறைந்தது; எனினும், அனைத்து ரகங்களின் விலை ஏறுமுகமாக இருந்தது. இந்த வாரம், 48 லட்சத்துக்கு பருத்தி வர்த்தகம் நடந்தது. அவிநாசி வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நடந்த பருத்தி ஏலத்துக்கு 3,700 மூட்டைகள் வரத்தாக இருந்தது. இது, கடந்த வாரத்தை காட்டிலும் 1,300 மூட்டைகள் குறைவு. இருப்பினும், ஆர்.சி.எச்., பென்னி, டி.சி.எச்., ரகங் கள் விலை சற்று அதிகரித்துள்ளது.

மேற்கண்ட ரகங்கள் குவிண்டாலுக்கு ரூ.20 முதல் ரூ.100 வரை உயர்ந்தன. இந்த வார ஏலத்தில் அனைத்து ரக பருத்தி விலை விபரம் (குவிண்டாலுக்கு) பின் வருமாறு: எல்.ஆர்.ஏ., ரூ.3,200 முதல் ரூ.3,450 வரை, ஆர்.சி.எச்., மற்றும் பென்னி ரூ.3,300 முதல் ரூ.3,720 வரை, டி.சி.எச்., ரூ.4,100 முதல் ரூ.4,820 வரை, மட்டம் ரூ.1,950 முதல் ரூ.2,200 வரை. இந்த வார பருத்தி ஏலம் குறித்து அவிநாசி கூட்டுறவு விற்பனை சங்க தனி அலுவலர் பழனிசாமி கூறியதாவது: ஆர்.சி.எச், பென்னி ஆகியன குவிண்டாலுக்கு ரூ.100 அதிகமாகவும், டி.சி. எச்., ரூ.20 அதிகமாகவும் ஏலத்தில் எடுக்கப்பட்டது. திண்டுக்கல் புதுப்பட்டி, கோபி திங்களூர், கிணத்துக்கடவு ஆகிய பகுதிகளில் இருந்து விவசாயிகள் பருத்தி கொண்டு வந்திருந்தனர். இந்த வார ஏலத்தில் 140 விவசாயிகள், 15 வியாபாரிகள் பயனடைந்தனர். ரூ.48.20 லட்சத்துக்கு வர்த்தகம் நடந்தது. வரும் வாரங்களில் வரத்து அதிகரிக்கும் வாய்ப்புள்ளது, என்றார்.

Exit mobile version