Site icon Vivasayam | விவசாயம்

தமிழக விவசாயிகளை காக்க காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தால் போதுமா?

காவிரி மேலாண்மை வாரியம் கேட்டு தமிழகம் முழுவதும் இன்று ‘முழு கடைஅடைப்பு’ நடத்த எதிர்கட்சி அழைப்பு விடுத்துள்ளது. இதில் தமிழக அரசு பஸ் ஊழியர்கள் பந்த்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.. இந்த பந்த்திற்கு வணிகர் சங்கங்களின் ஆதரவு அறிவிப்பு காரணமாக கடைகள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளது.
இந்நிலையில் தமிழகத்தை கண்டித்து கர்நாடகாவிலும் பந்த்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டதால், தமிழக, கர்நாடக மாநில எல்லையில் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

காவிரி நீர் தமிழகத்திற்கும், தஞ்சை டெல்டா பகுதிகளின் வாழ்வாதாரத்திற்கும் அச்சாரம் போன்றது. எனவே அதை தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பெறவேண்டும். அதே சமயம் ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் தமிழகம் மற்றும் கர்நாடகாவில் என்னென்ன பயிர்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன என்ற கணக்கெடுப்பை நாம் அனைவரும் செய்யவேண்டியது அவசியமாகிறது. ஒரு பக்கம் மழை வஞ்சித்தாலும் இன்னொரு புறம் பருவ நிலையும் மாறிவருகிறது. எனவே காலம் காலமாக பயிரிட்ட நம் பாரம்பரிய பயிர்களை கண்டறிந்து அவற்றினை மீண்டும் பயிரிட செய்வது மிக அவசியமாகிறது.

மேலும் தமிழகத்திற்கு காவிரி எந்த அளவுக்கு இன்றியமையாதோ, அதே அளவு தமிழகத்தில் உள்ள எல்லா நீர் நிலைகளும் காப்பாற்றப்படவேண்டியது மிக அவசியம், காவிரிக்காக போராடும் எல்லா கட்சியினர்களும் அவரவர்கள் சார்ந்த ஊர்களில் உள்ள நீர்நிலைகளை காப்பாற்ற போராடவேண்டும் என்றும் அக்ரிசக்தியின் விவசாயம் குழு கேட்டுக்கொள்கிறது. இப்படி நம்மிடையே நாம் செய்யவேண்டிய பணிகள் நிறைய உண்டு, அதை நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து முயற்சிக்கவேண்டும்

கீழேயுள்ள மறுமொழி வசதி மூலம் எங்களுக்கு உங்கள் கருத்துக்களை, உங்கள் தீர்வுகளையும்  எங்களுக்கு அனுப்பலாம்.

செல்வமுரளி

Exit mobile version