Site icon Vivasayam | விவசாயம்

தெய்வக்காடுகள்!

மனிதர்களுக்கு வைத்தியம் செய்ய மருத்துவர்கள் இருக்கும்போது ,
நாட்டுக்குரிய நரம்பு வைத்தியர் மரங்கள் என்று முதுமொழிகள் உண்டு

சங்க காலத்திற்கு முன்பு குரு குலக்கல்வி காடுகளில் நடைபெற்றது. மரங்கள் அடர்ந்த சோலையில் குருகுல வாசம் இருந்தது..இன்று அப்படிப்பட்ட குருகுல கல்வியும் இல்லை, ஆனால் அன்று நடந்த குழு குலக்கல்வியை அழித்து விட்டு பொறியயல் கல்லுரிகளைக் கட்டியுள்ளனர் .உலகை அழிவிலிருந்து காப்பாற்றக்கூடியது மரங்கள்.அதே சமயம் மரங்களை காப்பாற்றக்கூடிய சக்தி தெய்வங்களிடம் உள்ளது. “சாமியாவது பூதமாவது“இது “பெரியார் மண்“ என்று பதில் உரைப்பதில் “ய“ என்ற எழுத்துக்கு முன் ”ஒரு கொம்பு“ மட்டும் மாபெரும் வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது.பெரியோர் யார்? தெய்வத்தை வழிபடுவோர் ! ஆமாம் தெய்வத்தின் பெயரால் காப்பாற்றபட்ட காடுகளை .தமிழில் தெய்வக்காடுகள் என்று கூறுவோமா?.இப்படிப்பட்ட காடுகள் ஆசிய – ஆப்பிரிக்க நாடுகளில் நிறைய உண்டு. இந்தியாவின் ஒரு ஆன்மிகம் தேசம் என்பதால் இப்படிப்பட்ட தெய்வக்காடுகள் .இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் உண்டு. இப்படிப்பட்ட காடுகளில் யாரும் மரம் வெட்டமாட்டார்கள்.இலைகளை யாரும் எரிக்கமாட்டார்கள். கனிக் கொட்டியிருக்கும் யாரும் தொடமாட்டார்கள்.

இப்படிப்பட்ட காடுகளில் பல்லாயிரம் ஆண்டு பழைமையானதாகவும் இருக்கலாம்.இப்படிப்பட்ட காடுகள் குறிஞ்சி முல்லை மருதம் நௌடதல் பாலை போன்ற ஐந்து உயிர்ச்சூழல் மண்டலங்களிலும் பல்லுயிர் பெருக்கப் பணியை சிறப்புற செய்து கொண்டுக்கும் அபுர்வத் தாவரங்கள் காப்பாற்றபட்டிருக்கும் சில அபுர்வப் பிராணிகள் பறவைகள் ஜந்துக்கள் அகப்படலாம். இந்தியாவில் பாதுகாக்கப்படும் காப்பிட வன நிலப்பரப்பில் 1 சதவீதம் தெய்வக்காடுகள் தெய்வக் காடுகள் பற்றிய புள்ளிவிவரங்களில் சற்று முரண்பாடுகள் உண்டு. சில காடுகள் தனிப்பட்ட குடும்பம் அல்லது குறிப்பிட்ட சில சமூகங்களின் சொத்தாகவும் உள்ளது.மைய அரசின் சுற்றுச்சூழல் வனம் காலநிலை மாற்றம் சார்ந்த மாற்றம் சார்ந்த அமைச்சரகம் இப்படிப்பட்ட தெய்வக்காடுகள் 13270 சதுர கி.மீ நிலப்பரப்பில் அமைந்துள்ளன என்கிறது.

ஃபாரஸ்ட் சர்வே ஆஃப் இந்தியா வழங்கியுள்ள இந்தப் புள்ளிவிவரத்தை தவறு என்று சென்னையை மையமாக்க கொண்டு இயங்கும் சி.பி ராமசாமி அய்யர் சுற்றுச்சுழல் கல்வி மையம் கூறுகிறது. இந்தக் கல்வி மையம் சுற்றுச்சூழல் அமைச்சரக்கதின் ஒப்புதல் பெற்ற அரசு சாரா தொண்டு நிறுவனம் .இந்த நிறுவனம் வழங்கும் தகவல் அடிப்டையில் இப்படிப்பட்ட தெய்வகாடுகள் 10377 சதுர கி.மீ மட்டுமே. இந்த நிறுவனம் அமைச்சரக உதவியுடன் ஃபாரஸ்ட் சாவே வழங்கியுள்ள புள்ளி விவரத்தின் நம்பகத்தன்மையைக் கண்காணித்து நிநைகுறைகளைச் சீர் செய்துள்ளது.தெய்வக்காடுகள் என்பதால் சில சமூகங்கள் சிறு தெய்வங்களாக வழிப்பட்ட இடத்தை விரிவுபடுத்தி
ஆலயம் கட்டியிருக்கலாம்.நகரக் குடியிருப்புகளுக்காக ஆக்கரமிக்கப்பட்டிருக்கலாம்.முன்பு நாம் கவனித்தபடி கல்லாரி ஆஸ்பத்திரி கட்ட மரங்கள் வெட்டப்பட்டு அழிவு நிலைத் தாவரங்கள் அழிக்கப்பட்டுப் பல்லுயிர்ப் பெருக்கம் பழுதுபட்டிருக்கலாம்.

தமிழ் நாட்டை எடுத்துக்கொண்டால் ஃபாரஸ்ட் சர்வேயின் கணக்கு 448 சதுர கி.மீ ஆனால் சி.பி ஆர் கணக்கு1275 ச.கி.மீ சி.பி.ஆர் முனைந்து பல தெய்வக்காடுகளை அடையாளப்படுத்தியுள்ளது.மாறாக ஹிமாசலப்பிரேசத்தில் அரசுக்கணக்கு 5000 ச.கி.மீ ஆனால் சி.பி.ஆர் மதிப்பீடு 329 ச.கி மட்டுமே

தெய்வக்காடுகளுக்கு ஐ.நா. அனைத்துலக சுற்றுப்சூழல் நிறுவன நிதி உதவி உண்டு தெய்வக்காடுகளை மாற்றம் செய்யாமல் உள்ளது உள்ளபடி காப்பாற்றபட்டிருந்தால் நிதிஉதவி பெறலாம். அப்படி வழங்கப்படும் தொகை மிகவும் குறைவு என்பதால் தெய்வகாடுகள் வேறு வளர்ச்சித் தேவை காரணமாக அழிக்கப்டும் வாய்ப்பு உண்டு இப்படிப்பட்ட தெய்வகாடுகள் மாசுகளுக்கு மருங்தாயிருந்தன. மாசுகளும் தாசுகளும் பெருகி மேலும் மேலும் வெப்பமாகிக் கொண்டேயிருக்கிறது. புவி வெப்பமாகிக் கொண்டேயிருக்கிறது. புவி வெப்பமாகும் நிலையைக் கட்டுப்படுத்தும் பல திட்டங்களில் மாசில்லா எரிசக்தியான சூரிய மின்சாரம் காற்றாடி மின்சாரம் எத்தனால் பெட்ரோல் தாவர எண்ணெய் டீசல் முன்னுரிமை பெற்று ஏனோ மரவளாப்பு கற்று பின்னுக்குத் தள்ளப்படுகிறது.மரம் என்ற மாமருந்துதான் உலகைக் காப்பாற்றும் பெரும் சக்தி விலையில்லா ஆக்சியஜன் தடையில்லாமல் பெற வன புனர்வாழ்வுத் திட்டஙடகளில் நீண்டகாலம் வளர்ந்து வெட்டப்பாடத மரங்கள் காப்பாற்ற வேண்டும். சவுக்கும் யுகலிப்டஸ் மரங்களும் குறுகிய காலத்தில் தெய்வாம்சம் நிரம்பிய தல மரங்கள் பட்டு விழும் வரை உயிர்காற்றை வழங்கி உலகம் உய்வதற்குரிய மாமருந்தை வழங்குவதால் தல மரங்களும் தெய்வகாடுகளும் வாழிய வாழியவே!

நன்றி : இணையம்

Exit mobile version