Site icon Vivasayam | விவசாயம்

மகாராஷ்டிரா விவசாயிகள் போராட்டம் , நாம் கற்றது என்ன?

மகாராஷ்டிராவில் விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி, விவசாயிகளின் மின்கட்டணம், விவசாய கடன் தள்ளுபடி மற்றும் விளைபொருள்களுக்கு தகுந்த விலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 50,000 விவசாயிகள் ஒன்றுதிரண்டு பிரம்மாண்ட பேரணி நாசிக்கில் கடந்த 6ம் தேதி துவங்கிய பேரணி, 180 கி.மீ தூரம் நடைப்பயணத்திற்கு பின் நேற்று மும்பையை வந்தடைந்தது. மும்பையில் மக்கள் உணவுப் பொருட்கள், தண்ணீர் கொடுத்து விவசாயிகளை அன்புடன் வரவேற்றனர். அவர்களுக்கு மருத்துவ சிகிச்சையும் அளிக்கப்பட்டது. சாலைகளில் விவசாயிகளுக்கு மலர்கொத்து கொடுத்து நகரவாசிகள் வரவேற்றது சமூக வலைத்தளங்களில் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது, அது மட்டுமல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாய சங்க பிரதிநிதிகள் 12 பேருடன், அரசு பேச்சுவார்த்தை நடத்தி அடுத்த இரண்டு மாதத்திற்குள் விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்படும் என எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்தபின் விவசாயிகளின் போராட்டம் திரும்ப பெறப்பட்டது.

என்னதான் இந்தப் பிரச்னைகள் இப்போதைக்கு தீர்க்கப்பட்டாலும் இது காலம்தோறும் தொடர நாம் வாய்ப்பளிக்கக்கூடாது, விவசாயிகள் தரப்பில் சொல்லப்படும் விளைச்சலின்மை, விலையின்மை காரணங்களும், அரசாங்கத்தரப்பில் கடன் தள்ளுபடியும், குறைந்தபட்ச விலை நிர்ணயமும் செய்வதில் உள்ள சிக்கல்களும் தவிர்க்க முடியாதவை, இரு தரப்பிலும் நியாயம் இருக்கும்பட்சத்திலும் நீிர் மேலாண்மையையும், இயற்கை வளங்களை பேணிக்காப்பதிலும் அரசு தீவிரம் காட்டவேண்டும்,. இது எல்லாருக்குமே பொருந்தும், இயற்கைக்யாகக் கிடைக்கும் உயிர் ஆதரங்களான நீர், நிலம், காற்று போன்றவற்றை மாசுபடுத்திவிட்டு நம்மால் தொடர்ந்து இம்பூமியில் வசக்க முடியாது, தமிழகத்தில் தூத்துக்குடி, சென்னை, திருச்சி, மதுரை போன்ற நகரங்களில் காற்று மாசுபாடு அபாயகரத்தை எட்ட உள்ளது. இது இந்த தலைமுறையை விட அடுத்த தலைமறையை இன்னமும் பாதிக்கும் , எனவே சுற்றுப்புறங்களை மேம்படுத்து பணிகளை நாம் செய்யவேண்டும், நம்மை சுற்றியுள்ள சூழலை ஆரோக்கியமாக வைத்துக்கொண்டால் பருவ நிலை மாற்றம் குறைவாகும், பருவ நிலை மாற்றம் குறைவானால் விளைச்சல் நிறைவாகும், விளைச்சல் நிறைவானால் விவசாயிகளும், விவசாயிகளால் அரசும் ஆரோக்கியமாக இயங்கும். எனவே நம்மைச்சுற்றியுள்ள எல்லா பகுதிகளையும் நாம் ஆரோக்கியமாக பேணிக்காப்பது மிக அவசியமாகும்

உங்கள் கருத்துக்களையும் எங்களுக்கு அனுப்பலாம்

Exit mobile version