Site icon Vivasayam | விவசாயம்

கிருஷ்ணகிரி மாவட்டதில் யானைகளால் வீணாகும் தக்காளியும், மாமரங்களும்

தேன்கனிக்கோட்டை பகுதியில் அட்டகாசம் செய்து வரும் யானைகள், மாமரங்களை முறித்து போட்டு துவம்சம் செய்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். கர்நாடக மாநிலம் பன்னார்கட்டா வனப்பகுதியிலிருந்து வந்துள்ள 100க்கும் மேற்பட்ட யானைகள், பல பிரிவுகாளக பிரிந்து கிருஷ்ணகிரி மாவட்டம் ஜவளகிரி, தேன்கனிக்கோட்டை வனப்பகுதி மரகட்டா, ஆலள்ளி, வட்டவடிவுபாறை, ஊடேதுர்கம், சானமாவு உள்ளிட்ட வனப்பகுதியில் முகாமிட்டு கடந்த 4 மாதங்களாக அட்டகாசம் செய்து வருகின்றன. இந்நிலையில், ஆலள்ளி காட்டில் முகாமிட்டுள்ள யானை கூட்டம், நேற்று முன்தினம் இரவு இருதுக்கோட்டை அருகே உள்ள ராமமூர்த்தி என்பவருக்கு சொந்தமான தோட்டத்திற்குள் புகுந்து பூத்து குலுங்கிய மாமரங்களை முறித்து போட்டு சென்றுள்ளன.

மேலும், அருகில் உள்ள தோட்டத்திற்குள் நுழைந்து அங்கிருந்த தென்னங்கன்றுகளை பிளந்து குருத்து பகுதியை தின்றும், முறித்து போட்டும் நாசம் செய்துள்ளன. அதே தோட்டத்தில் குத்தகைக்கு எடுத்து முத்து(45) என்பவர் பயிர் செய்துள்ள கேழ்வரகு மற்றும் ரோஜா செடிகளை காலால் மிதித்து நாசம் செய்தள்ளன.

தக்காளி தோட்டத்தை நாசம் செய்த யானைகள்
அதேபோல் வட்டவடிவுபாறை பகுதியில் முகாமிட்டுள்ள 40 யானைகள் பேவநத்தம், பாலேகுளி உள்ளிட்ட கிராமங்களையொட்டியுள்ள தோட்டத்திற்குள் புகுந்து, தக்காளி தோட்டத்தை காலால் மிதித்து நாசம் செய்து சென்றுள்ளன. தேன்கனிக்கோட்டை பகுதியில் தொடர்ந்து 70க்கும் மேற்பட்ட யானைகள் அட்டகாசம் செய்து வருவதால், விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். யானை கூட்டத்தை விரைவில் கர்நாடக வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும், பயிர் சேதத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேன்கனிக்கோட்டை பகுதியில் தொடர்ந்து அட்டகாசம் செய்து வரும் யானை கூட்டத்தை, கர்நாடக வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும். பயிர் சேதத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version