Site icon Vivasayam | விவசாயம்

களைக்கட்டும் மாங்கனி பருவம்!

தமிழகத்தில் வடமாவட்டங்களில் மாங்கனி பருவம் துவங்கியுள்ளது, அதே சமயம் பூக்களும் அதிகப்படியாக பூத்துள்ளதால் விவசாயி்கள் மகிழ்யடைந்துள்ளனர். தமிழகத்தில் குறிப்பாக கிருஷ்ணகிரி , தர்மபுரி மாவட்டங்களில் மாங்காய் அதிகமாக பயிரிடப்பட்டுள்ளது. தற்போது, மாந்தோப்புகளில் பூவும் பிஞ்சுமாக மாமரங்கள் காட்சியளிப்பது கண்கொள்ள காட்சியாக இருக்கிறது, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிகப்படியான மாங்கூழ் உற்பத்தி நிறுவனங்கள் இருந்தாலும் சில சமயங்களில் மாங்காய் வரத்து குறைவாக இருந்தால் அருகில் ஆந்திர மாநிலத்தில் இருந்து மாங்காய்கள் கொண்டுவரப்படுகின்றன. சமீபகாலமாக கால்தார் என்ற மருந்து கொண்டும் மாங்காய் பருவம் இல்லாத காலக்கட்டத்திலும் மாங்காய்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன, ஆனால் இத எந்த அளவுக்கு ஆரோக்கியமானது என்று தெரியவில்லை, இயற்கையான முறைக்கு மாறாக எப்படி உற்பத்தி செய்தாலும் அது நமக்கு நஞ்சுதான்,

Exit mobile version