Site icon Vivasayam | விவசாயம்

நிலப்போர்வை அமைக்க விவசாயிகள் ஆர்வம்

வெயில் மற்றும் களையால், பயிர்களுக்கு பாய்ச்சப்படும் தண்ணீர் உறிஞ்சப்பட்டு வீணாவதை தடுக்க, தோட்டக்கலை பயிர்களுக்கு, நிலப்போர்வை அமைப்பதில், விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழை எதிர்பார்த்த அளவு பெய்யாததால் ஏரி, குளங்களில் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. அதோடு நிலத்தடி நீர் மட்டமும் பாதிக்கப்பட்டது. ஆனால் இப்போது கோடைக்கு முன்பே வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், பயிர்களுக்கு பாய்ச்சப்படும் நீர் மற்றும் ஈரப் பதத்தை வெயில் மற்றும் களைகள் வேகமாக உறிஞ்சி வருகின்றன. இதனால், பயிர்களின் வளர்ச்சி மற்றும் விளைச்சல் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதை தடுக்க, பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், தாங்கள் சாகுபடி செய்துள்ள தோட்டக்கலைத்துறை பயிர்களுக்கு நிலப்போர்வை அமைப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். நிலப்போர்வை அமைப்பதால், நிலத்தில் உள்ள ஈரப்பதத்தை வெயில் மற்றும் களைகள் உறிஞ்சுவது பெருமளவு கட்டுப்படுத்துவதாகவும், பயிர்களுக்கு பாய்ச்சப்படும் தண்ணீர் மற்றும் உரங்களின் பலன்கள், முழுவதும் பயிர்களுக்கு கிடைத்து வருவதால், தற்போது பயிர்கள் நன்கு வளர்ந்து வருவதால், விளைச்சல் அதிகரித்து வருவதாக விவசாயிகள் தெரிவித்தனர். இதில், 60 சென்ட் நிலத்துக்கு நிலப்போர்வை அமைக்க, 12 ஆயிரம் ரூபாய் செலவு ஆகிறது என்றும், களை எடுப்பது உள்ளிட்ட பராமரிப்பு செலவை கணக்கிடும் போது, இது குறைவாக உள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர். மேலும், இதற்கு, தோட்டக்கலைத்துறை சார்பாக மானியம் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

Exit mobile version