Site icon Vivasayam | விவசாயம்

விவசாயிகளுக்கு ஒரு எச்சரிக்கையும் ஆலோசனையும்!

என்னதான் விவசாயம் தண்ணீர் பிரச்னை, விலைப் பிரச்னை என பலப்பிரச்னை இருந்தாலும் நாமனைவரும் மறந்துவிடுவது அவரவரவது உடல்நிலையை…..

தமிழகத்தில் நாளுக்கு நாள் சர்க்கரை நோய் அதிகரித்துவருகிறது, எனவே விவசாயிகள் முன்னேற்பாடாக மாதத்திற்கு ஒரு முறை சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்றவற்றினை மேற்கொள்ள அக்ரிசக்தி குழுசார்பில் கேட்டுக்கொள்கிறோம்

ஏற்கனவே சர்க்கரை நோய் இருந்தால் மாதந்தோறும் சிறுநீரக பரிசோதனையை மேற்கொள்வது அவசியம். ஏனெனில் நாள்பட்ட சர்க்கரை நோய் இருந்தால் சிறுநீரகம் தீவிரமாக கண்காணிக்கப்படவேண்டும். ஏற்கனவே ஒரு இடத்தில் பரிசோதனை செய்தாலும் இன்னொரு மருத்துவரிடமும் ஒரு ஒப்புதல் கேட்பது சாலச்சிறந்தது. அதோடு சர்க்கரை நோய் என்று வந்துவிட்டால் நமது உணவு விசயங்களில் மக்கள் அக்கறையுடன் செயல்படுவது அவசியமாகிறது

பல விவசாயக்குடுமபங்களில் இருப்பவர்களுக்கு விவசாய காப்பிடு, தமிழக முதல்வரின் காப்பீடு பற்றிய தெரியவில்லை எனவே விசயம் அறிந்தவர்கள் தங்கள் குடும்பத்திற்கு என்று விவசாய காப்பீடு, தமிழக முதல்வரின் விரிவான காப்பீட்டுத்திட்டம் போன்றவற்றினை மேற்கொள்வது மிக அவசியம், காப்பீட்டுத்திட்டம் பற்றிய விவரம் தெரியாதவர்கள் அந்த மாவட்ட சுகாதாரத்துறை நல அலுவலரிடம் தொடர்பு கொண்டு தங்கள் காப்பீட்டு திட்டம் பற்றி தெரிந்துகொள்வது மிக அவசியம். மேலும் விபரங்களுக்கு https://www.cmchistn.com/

மாறிவரும் உணவுமுறையில் நோயில்லா வாழ்வென்பது சற்று சிரமம் என்றாலும் நோயை தொடர்ந்து கண்காணிப்பது மிகவும் அவசியம்

விவசாயிகளின் நலனில் என்றும் அக்கறையுடன்
அக்ரிசக்தி

Exit mobile version