Site icon Vivasayam | விவசாயம்

பூசணி வெள்ளரிக்காய்ச் சாறு!

1. வெண்பூசணி, வெள்ளரிக்காய் கீற்றுகள்
2. தயிர், தண்ணீர்
3. உப்பு, மிளகாய், பூண்டு, இஞ்சி, கொத்துமல்லித்தழை

நன்கு கடைந்து மட்பாண்டத்தில் திண்மக்களிம்பினை வைத்துக் கொண்டு, அவ்வப்போது தேவைக்கொப்ப தண்ணீரில் கலந்து குடித்து வர வேண்டியது.

“பெரும்பூசிணிக் காய்க்குப் பித்தமோ டுட்காய்ச்ச
லருஞ்சார நீர்க்கட் டருமே மருந்திடுதற்
பித்தரை மசுதிரம் பேய்வறட்சி மேகமும்போ
மெத்த வனிலமூறும் விள்”

கலியாணப்பூசணி(வெண்பூசணி)க்கு பித்தரோகம் உட்காய்ச்சல் பித்தம் பேய்ச்சொறி பிரமேகம் எல்லாம் வராது காக்கும் தன்மையுண்டறிக!!

“உண்டருந்தத் தீயெழுப்பு முண்மருந்தைத் தான்முடுக்குங்’
கண்ட கரப்பனைக் கடுக்குங்காண் பண்டிதரே
உள்ளரிப்பை நீர்க்கடுப்பை யூரைவிடுத் தோட்டிவிடும்
வெள்ளரிக் காயின் குணத்தை விள்”

வெள்ளரிக்காய், நீர்ச்சுருக்கு வராது காத்து பசியின்மை முறித்து நீர்ச்சத்து பெருக்கி தோல்நலம் பேணுமன்றறிக!!

இது பழமைபேசி பேச்சு:

பூசணித் தண்ணியும் புளுதண்ணியும் ஒன்னுலே! குடிச்சா வவுறு குளுந்து போகும். மனசும் குளுந்து போகும். மனுசருக்கு மனுசரு நல்லாப் பழம பேசி ஒன்னுமொன்னுமா இருக்கலாம்லே!!

Exit mobile version