Site icon Vivasayam | விவசாயம்

விஷங்கள் பல உண்டு!

           நாட்பட்ட தோல் நோய்கள் மற்றும் ஊறலை விஷக்கடி என்பார்கள். கை, கால், முகம் வீங்குவதையும் விஷ நீர் அல்லது சுரப்பு என்பார்கள். சித்த மருத்துவ மூல நூல்களில்… கடி விஷம், படுவிஷம், தங்கு விஷம், விஷ நீர் முதலிய சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. நச்சுயிரிகள் கடிப்பதால் ஏற்படும் நச்சு நிலை, கடி விஷம். ஒவ்வாத பொருட்கள் உடலில் படுவதால் ஏற்படும் வீக்கம், தடிப்பு, ஊறல் முதலியன படு விஷம் மல ஜலக் கழிவுகள் சரியான முறையில் வெளியேற்றப்படாமல் உடலில் தங்குவது, தங்கு அல்லது விஷ நீர்.

       நோயாளி சொல்லும் அறிகுறிகளை வைத்து, ஒரு அறிகுறிக்கு ஒரு மருந்து வீதம் ஐந்து முதல் பத்து மருந்துகளை நவீன மருத்துவர்கள் பரிந்துரைக்கும் நிலைதான் தற்போது உள்ளது.

       ஆனால், பாரம்பர்ய சித்த மருத்துவத்தில் ஒரு மருந்தே, ஐந்து, ஆறு நோய்களைக் குணமாக்கும். அறிகுறிகளைக் குணமாக்குவதல்ல சித்த மருத்துவம். நோய்களைக் குணமாக்குவதுதான் சித்த மருத்துவத்தின் சிறப்பு.

நன்றி பசுமை விகடன்

Exit mobile version