Site icon Vivasayam | விவசாயம்

பசுந்தாள் உரமிடுதல்

            நம் நாட்டில் அதிகளவு அங்கக உரங்களையே நிலத்திற்கு விவசாயிகள் பயன்படுத்தி வருகிறார்கள்.இதனால் மண் வளம் குறைந்து மகசூலும் குறைந்து கொண்டே இருக்கிறது. தற்பொழுது பசுந்தாள் உரமிடுதல், மட்கிய உரமிடுதல் போன்றவற்றின் பயன்பாட்டால் இந்தியாவானது உணவு பற்றாக்குறையிலிருந்து மீண்டும் உணவு சேமிப்பிற்கு மாற்றமடைந்துள்ளது. மேலும் பசுந்தாள் உரமானது குறைந்த விலையில் கிடைக்கிறது. இல்லையென்றால் நம் நிலத்திலேயே விதைத்தும் நிலத்தின் வளமையை பெருக்கலாம்.பசுந்தாள் உரமானது மண்ணின் அங்கக பொருட்களின் தன்மையை அதிகரிக்கிறது.

பசுந்தாள் உரமிடுதல்:

      இது தமிழ்நாட்டில் ஆயிரக்கனக்கான ஆண்டுகளாக நம் விவசாயிகளிடம் தொன்றுதொட்டு நடைமுறையில் இருந்துவரும் நடைமுறை ஆகும்.இந்த முறையில் பசுந்தாள் பயிர்கள் நிலத்தில் வளர்க்கப்பட்டு பூ பூக்கும் தருணத்தில் அந்நிலத்திலேயே மண்ணோடு சேர்த்து உழப்படுகிறது. இவ்வுரமிடுதலால் பயிர்களில் நைட்ரஜனை நிலை நிறுத்த பயன்படுகிறது.

பசுந்தாள் உரமிடுதலின் நன்மைகள்:

1.பசுந்தாள் பயிர்களானது மண்ணில் தழைச்சத்தை நிலைநிறுத்தும் பண்புடையது.இதனால் அடுத்த பயிருக்கான உரத்தேவை 40-60% வரை குறைகிறது.

2. மண்ணின் இயற்பியல் மற்றும் வேதியியல் தன்மைகளை உயர்த்துகிறது.

3.காரத்தன்மை உடைய நிலத்தை நடுநிலைப்படுத்த பயன்படுகிறது.

4.மண்ணில் பொதுபொதுப்புதன்மை மற்றும் காட்றோட்டத்தை அதிகப்படுத்துகிறது.

5.பூச்சித்தொல்லைகளைக் குறைக்கிறது.(வேம்பு,புங்கம் முதலியன)

6.மண் அரிப்பை தடுக்கிறது.

வளர்ப்பு முறைகள்:

         பொதுவாக பசுந்தாள் பயிர்களை அனைத்து பருவங்களிலும் வளர்க்க முடியும். பசுந்தாள் பயிர்களை அடர்வாக விதைத்துக்கொள்ள வேண்டும்.சிறப்பு கவனிப்புகள் எதுவும் தேவையில்லை.வயலில் ஒன்றிரண்டு பூக்களை கண்டவுடன் உடனடியாக பசுந்தாள் பயிர்களை மண்ணில் மடக்கி உழுதல் வேண்டும்.பசுந்தாள் பயிர்கள் பூ பூத்துவிட்டால் அதன் சத்துக்கள் காய் வளர்வதற்க்கு சென்றுவிடும். இது குறுகிய காலத்தில் வளரும், அதிக அளவு ஊட்டச்சத்துகளை கொண்டது.

பசுந்தாள் பயிர்கள்:

1.சணப்பை

2.அவுரி

3.கொழிஞ்சி

4.நரிப்பயறு

5.கொள்ளு

6.தட்டைப்பயறு

7.அகத்தி

8.கொத்தவரை

9.தக்கைபூண்டு

10.மணிலா &மற்றும் பிற..…வேம்பு புங்கம் எருக்கு முதலிய மரங்களின் இலைகளை வெளியில் இருந்து கொண்டு வந்தும் நிலத்தில் பயன்படுத்தலாம்.

வழக்கத்தில் இல்லாத பசுந்தாள் உரப்பயிர்கள்

  1. பயறுவகை மற்றும் பயறுவகை அல்லாத ஓராண்டு பயிர், புதர்செடிகள் மற்றும் மரங்கள் அதிக அங்கக உயிர்ப் பொருள் மற்றும் கணிசமான அளவில் தாவர ஊட்டச்சத்துகளை அளிக்கின்றன.
  2. அதிக கார்பன் – நைட்ரஜன் விகிதம் கொண்ட அங்கக எச்சங்களை உழுது விட்ட பின்னர் பயிரில் ஆரம்ப தடை காணப்படும்.
  3. அதிக லிக்னின் எளிதாக சிதைவுபடுதலை தடுத்து சிதைவின் போது அதிக விகிதத்தில் கரிம அமிலங்களை வெளியிடுகிறது. இதனால் இளம் நாற்றுகளின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. இதனை தடுக்க கூடுதல் தழைச்சத்தினை இட வேண்டும் அல்லது தகுந்த நுண்ணுயிர் உட்புகுதலை பயன்படுத்த வேண்டும்.

பசுந்தாள் உரப்பயிர்களின் வடிவங்கள்

  1. மேம்படுத்தப்பட்ட தரிசு, அதாவது தரிசில் பசுந்தாள் உரப்பயிர்கள் பயிரிடுதல்.
  2. பக்கச் சந்தில் பயிர் சாகுபடி: விரைவாக வளரும் மரங்கள், புதர்செடிகள் (பயறுவகை பயிர்கள்) அல்லது; புற்களை வரிசையில் பயிரிட்டு, தொடர்ந்து வெட்டி விட வேண்டும்.
  3. பல பாரம்பரிய பண்ணைய முறையில் மரங்களை பயிருடன் ஒருங்கிணைத்து பயிர் செய்கின்றனர்.
  4. உணவுப் பயிர்களுக்கு இடையில் பயறுவகை பயிர்களை தொடர் பயிர்வளர்ப்பு முறையில் பயிரிடலாம்.
  5. நேரடி மூடாக்கிடுதல்: அடர்த்தியான புற்கள் மற்றும் பயறுவகை பயிர்களை மூடு பயிர்களாக பயிரிட்டு, அதனை களைக்கொல்லி கொண்டோ அல்லது கைகளால் அகற்றி விட்டு, உணவுப் பயிர்களை பயிரிடுவதன் மூலம் மண் உழவு நடவடிக்கைகளை குறைக்கிறது.
  6. நிழல் தரும் பசுந்தாள் உரப்பயிர்கள் (பழத் தோட்டங்கள், காபி பயிரிடும் பகுதிகள், பல அடுக்கு சமையலறை தோட்டங்கள்

பசுந்தாள் உரங்களை தேர்ந்தெடுக்க உதவும் காரணங்கள்

காரணங்கள் விளைவுகள்
அதிக அளவு அங்கக உயிர் பொருள் உற்பத்தி மண்ணில் உள்ள ஊட்டச்சத்துக்களை உறிஞ்சி தாவர பகுதிகளில் சேமித்து வைத்தல் களைகளின் வளர்ச்சியை குறைத்தல்
ஆழமான வேர்களை கொண்டு காணப்படும் முதன்மை பயிர்களால் பெற முடியாத கீழ்மட்டத்திற்கு அடித்துச் செல்லப்பட்ட ஊட்டச்சத்துக்களை உறிஞ்சி சேமிக்கின்றன (தாவரப்பகுதிகளில்)
ஆரம்ப காலகட்டத்தில் அதிக அளவு வளர்ச்சியுடன் காணப்படும் விரைவாக வளர்ந்து நிலமட்டம் முழுவதும் பரவி மண் பாதுகாப்பை ஏற்படுத்துகிறது. களை வளர்ச்சியை கட்டுப்படுத்துகிறது
கிளைப்பகுதிகளை காட்டிலும் அதிக அளவு இலைகளை கொண்டு காணப்படும் எளிதில் மட்கும் தன்மை கொண்ட அங்கக பொருட்கள்
குறைவான கார்பன் நைட்ரஜன் வழுதம் பயிர்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை எளிதாக கிடைக்கச் செய்கின்றன. மேலும் இவை மண்ணில் சிறியதாக எளிதில் வெட்டி போடுவதற்கு ஏற்றதாக உள்ளன
(நைட்ரஜன்) தழைச்சத்து நிலை நிறுத்துதல் தழைச்சத்து அளவை மண்ணில் அதிகரிக்கிறது
மைக்கோரைஸா உடன் சாதகமான இணக்கம் பயிர்களுக்கு பெருமளவு (பாஸ்பரஸ்) மணிச்சத்து கிடைக்கச் செய்கிறது
சரியான அளவு நீர் பயன்பாடு


சாகுபடி பயிர்விளைச்சல் மற்றும் தன்மை மேம்பாடு
  • 15 முதல் 20 சதவிகித விளைச்சலை அதிகரிக்கிறது
  • நெல்லின் வைட்டமின் மற்றும் புரதம் போன்ற சத்துக்களை அதிகரிக்கிறது

 

தொகுப்பு கா.சரண்ராஜ்

இளங்கலை வேளாண் மாணவர்

நன்றி 

 

Exit mobile version