Site icon Vivasayam | விவசாயம்

வெங்காயம்

    வெங்காயத்தை ஆனியன் என்றும் கூறலாம். இது யூனியோ என்ற இலத்தீன் வார்த்தையிலிருந்து தோன்றியது. இதற்கு பெரிய முத்து என்று அர்த்தம்.வெங்காயத்தில் புரதச்சத்துகள், தாது உப்புகள், வைட்டமின்கள் உள்ளன. வெங்காயத்தின் தாவரவியல் பெயர் : அல்லியம் சீபாஇது தண்டுள்ள சிறிய செடி. ஒரு மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது.

கண்ணில் நீர் வரக் காரணம்

வெங்காயம் நறுக்கும் போது அதன் இதழ்களில் காணப்படும் ஆலினேஸ் என்ற நொதி அந்த இதழ்களில் காணப்படும் புரோப்பினிசிஸ்டைன் சல்பாக்சைடு என்ற பொருள் மீது வினை புரிந்து புரோப்பின் சல்பினிக் அமிலமாக மாறுகிறது. இந்த அமிலம் எளிதில் ஆவியாகி காற்றில் கலந்து நம் கண்களை அடைந்து உறுத்துகிறது. அதன் விளைவாக கண்ணீர் சுரப்பியிலிருந்து நீர் சுரந்து வெளியேறுகிறது.

மருத்துவ பயன்கள்

  1. கிருமிகளுக்கு எதிரானது. வீக்கம், வலி போக்கும். உடல் வெப்பநிலை சமநிலை ஆகும்.
  2. வெங்காயம், மஞ்சள், நெய் சேர்த்து லேசாக சுட வைத்து உடையாத கட்டிகள் மேல் வைத்தால் கட்டிகள் பழுத்து உடையும்.
  3. மோரில் கலந்து குடிக்க இருமல் குறையும்.
  4. பல் சொத்தை உள்ளவர்கள் வெங்காய சாறையும், வெந்நீரையும் கலந்து வாய் கொப்பளித்து பின் வெங்காயச்சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவ பல்வலி, ஈறுவலி குறையும். மயக்கத்தையும் தெளிவிக்கும் தன்மை கொண்டது.
  5. இதை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர நரம்புத் தளர்ச்சி குணமாகும்.
  6. தேள் கடித்த இடத்தில் வெங்காயத்தை தேய்க்க விஷம் இறங்கும். சிறிய வெங்காயம் நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது. இதில் இன்சுலின் இருப்பதால் அவர்கள் இதை பயன்படுத்தலாம்.
  7. ரத்த அழுத்தத்தை குறைக்கும். இழந்த சக்தியை மீட்கும். படை, தேமல் மேல் வெங்காயச் சாற்றை தடவ மறைந்துவிடும்.
  8. வெங்காய ரசத்தை நீர் கலந்து குடிக்க நல்ல தூக்கம் வரும். இச்சாறை தினமும் புகைப்பிடிப்பவர்கள் ஒரு அவுன்ஸ் குடித்து வந்தால் நுரையீரல் சுத்தமாகும்.
  9. முகப்பரு உள்ள இடத்தில் நறுக்கிய வெங்காயத்தை தேய்த்தால் நீங்கும்.
  10. வெங்காயச் சாறோடு உப்பு கலந்து அடிக்கடி சாப்பிட மாலைக்கண் நோய் சரியாகும்.
  11. தலைமுடி பிரச்சனைக்கு சிறந்த தீர்வாக வெங்காயம் உள்ளது. அதற்கு வெங்காயத்தில் உள்ள சல்பர் தான் காரணம். ஆய்வு ஒன்றில், வெங்காயத்தில் உள்ள சல்பரானது தலை முடி உதிர்வால் ஏற்படும் வழுக்கைத் தலையில் முடி வளர உதவுவது தெரிய வந்துள்ளது. எனவே உங்களுக்கு முடி அதிகம் உதிர்ந்து, குறைந்தது போல் காணப்பட்டால், வெங்காயத்தை தலைமுடி குறைவாக இருக்கும் இடத்தில் பயன்படுத்தி வாருங்கள்.

Exit mobile version