Site icon Vivasayam | விவசாயம்

வேரில் மருந்து விதையில் விஷம்!

     இந்திய மூலிகைகளில் அமுக்கிராங் கிழங்கு என்ற அசுவகந்தாவுக்கு நிறையத் தேவை உண்டு.

ஏனெனில் இதன் கிழங்கு (வேர்), சகலவிதமான நரம்புக் கோளாறுகளுக்கும், நல்ல நிவாரணி. மூட்டுவலி, கால்வலி, முதுகுவலி ஆகியவற்றை அசுவகந்தா லேகியம் குணப்படுத்தும். உடலில் வலியை  ஏற்படுத்தும் கெட்ட வாயுவை வெளியேற்றி நரம்பு உயிர் மங்களில் உயிர்க்காற்றை நிரப்பும். அசுவகந்தாவின் வேர்க்கிழங்கில் மட்டுமே வலிநீக்கி நரம்புக் கோளாறை நீக்கும் சக்தி உண்டு. அதே சமயம் அசுவகந்தாவின் விதையில் விஷம் உண்டு. சில ரசாயன மருந்து நிறுவனங்கள் அசுவகந்தா இலை, விதை, கிழங்கு எல்லாவற்றையும் பயன்படுத்தி சாரம் எடுத்து விற்கிறார்கள். அசுவகந்தா சாரம் மாற்று விளைவுகளை ஏற்படுத்தும். நமது ஆயுர்வேத மருத்துவத்தின் சிறப்பு ஒவ்வொரு மூலிகைகளிலும் வேரில் உள்ள ரசாயனம், விதையில் உள்ள ரசாயனம், இலையில் உள்ள ரசாயனம், பற்றித் தனித்தனியே பிரித்து ஆராய்ந்து, கொள்ளத்தக்கவை மட்டும் ஏற்கப்படுகிறது.

-ஆர்.எஸ்.நாராயணன்

Exit mobile version