Site icon Vivasayam | விவசாயம்

பூச்சிகளை விரட்டுவதில் வேம்பின் பங்கு

பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு மாற்றாக மரப்பயிர்களுக்கு ஊடுபயிராக வேம்பை வளர்த்து பூச்சிகளை விரட்டுவது மட்டுமல்லாமல் வேப்பங்கொட்டை மூலம் பூச்சிவிரட்டிகளையும் கிருமிநாசினிகளையும் தயாரிக்கலாம்.
வேம்பு நேரடியாக பூச்சிக்கொல்லி மற்றும் பூச்சிவிரட்டியாக செயல்படுகிறது. வேம்பின் இலை,பூ,விதை,இலை,பட்டை, ஆகிய ஒவ்வொன்றும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் தன்மை கொண்டவை. அந்துப்பூச்சி, கூன்வண்டு,காண்டாமிருக வண்டு போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட பூச்சிவகைகளை வேம்பு கட்டுப்படுத்துகிறது. இதன்மூலம் பூச்சி தாக்குதலால் பயிர்களுக்கு பரவும் நோய்களை முன்கூட்டியே தடுக்க முடியும்.
வேம்பில் உள்ள அசாடிராக்டின் என்ற அமிலப்பொருளே பூச்சிக்கொல்லி தன்மைக்கும் வேம்பின் கசப்புத்தன்மைக்கும் காரணம். இவை பூச்சிகள் பயிர்களை உண்பதை தடுப்பது மட்டுமல்லாமல் பூச்சிகள் முட்டையிடுவதையும் தடுக்கின்றன.
மேலும், வேம்பு காற்றிலுள்ள தழைச்சத்தை பூமிக்கு ஈர்க்கும் தன்மை கொண்டது. வேம்பை விளைநிலங்களில் வளர்ப்பதன் மூலம் மண் அரிப்பையும் கட்டுப்படுத்தலாம். தென்னை மரங்களுக்கு ஊடே வேம்பை வளர்க்கும் பொழுது கரையானையும் கட்டுப்படுத்தலாம். வேம்பு விதைகளை நன்கு காயவைத்து பொடியாக்கி NSKE என்று சொல்லக்கூடிய வேப்பங்கொட்டைக் கரைசலைத் தயாரிக்கலாம். இதனால் பயிர்களில் வரும் பல்வேறு வகையான நோய்களை கட்டுப்படுத்தலாம்.
எ.செந்தமிழ்,
வேளாண் இளங்கலை மாணவர்
Exit mobile version