Site icon Vivasayam | விவசாயம்

விவசாயிகளின் வருமானமும், பாதிப்புத் தன்மையும்!

விவசாயிகளுக்கு ஏற்பட்ட தொல்லைகள் காரணமாகவும் 2022 வாக்கில் விவசாயிகள் வருமானம் இரட்டிப்பாகும் என்று பிரதமர் கூறியதாலும் விவசாயிகளின் வருமானம் பற்றிய ஆர்வம் ஏற்பட்டது. இதனால், விவாதங்களின் மையமாக விவசாயிகள் காணப்பட்டார்கள். விவசாய வருமானத்திற்குப் பல காரணிகள் உண்டு. உயர் வருமானத்திற்கு முக்கிய காரணி அவருடைய நிலத்தின் செழுமையாகும். விவசாயத்திற்குத் தேவைப்படும் அனைத்து இடு பொருட்களுக்குமான உற்பத்தித் திறனை மேம்படுத்த வேண்டும். ஏனென்றால், நீர் மற்றும் உரங்கள் மிகவும் விலை உயர்ந்தவை. தொழில்நுட்ப மேம்பாட்டால் உற்பத்தியும் திறமையும் வலுக்கிறது. சந்தையில் உபரி மற்றும் விவசாயப் பொருட்கள் வீணாகுதல் ஆகியவையும் அந்த பொருட்களின் மதிப்பை நிர்ணயிக்கின்றன. ஆனால், இந்தப் பொருட்களின் விலையும், அவைகளை உற்பத்தி செய்யத் தேவையான இடுபொருட்களின் விலையும் விவசாய வருமானத்தை நிர்ணயிக்கின்றன.

இந்தியாவின் விவசாயம் சார்ந்த பருவநிலையில் பகுதிக்கு பகுதி மாற்றங்கள் உள்ளன. அதைப்போலவே, மாநிலங்களுக்கிடையேயான கொள்கைகளும். இதனால் பயிர் விளைச்சல் சதவிகிதங்கள், உள் கட்டமைப்பு வசதிகள் மற்றும் விவசாயம் சார்ந்த அமைப்புகள் மாநிலங்களுக்கிடையே வேறுபடுகின்றன. விவசாய நிலம் சிறியதாக இருந்தால் அதனால், நல்ல வரவு இருக்காது. ஜனத்தொகை வளர்ச்சி மற்றும் தொழிற்கூடங்களில் மிகக் குறைந்த அளவே வேலை வாய்ப்பு உருவாகுதல் ஆகியவை காரணமாக நிலத்தில் அதிக மக்கள் வேலை செய்து விவசாய தனி நபர் வருமானம் மிகவும் தாழ்ந்துள்ளது. இயற்கை, ஜனத்தொகை மற்றும் நிர்வாக மாற்றங்களினால் ஓரிடத்தை விட மற்றொரு இடத்தில் விவசாயம் அதிகம் பயனளிக்கக்கூடியதாக உள்ளது. வேலையாட்கள் இடம் விட்டு இடம் பெயர்வதால் ஒவ்வொரு குடும்பத்தின் வருமானம் உயரவும் விவசாயத் துறைக்கு புதிய உத்திகளையும், திறமைகளையும் கொண்டு வரவும் வாய்ப்புள்ளன. விவசாய வருமானம் பெருகும் போது, மக்களின் தேவை அதிகரித்து விவசாயம் அல்லாத துறைகள் பயன் பெறுகின்றன.

விவசாயத்திற்கு மிகப்பெரிய ஆபத்து வானிலை ஆகும். பருவமழை பொய்த்தால் இந்த ஆண்டு உற்பத்தி பாதிக்கப்படுவது மட்டுமல்லாமல் அணைகள், நதிகள், கால்வாய்கள், கிணறுகள் மற்றும் நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்பட்டு, வரும் ஆண்டுகளிலும் பாதிப்பு இருக்கும். 2014-15 ஆண்டுகள் போல், பருவநிலை தொடர்ந்து பொய்த்தால் விவசாயிகள் தங்களுடைய முதலீடுகளை இழந்து கடனிலும் தொல்லைகளிலும் வீழ்கிறார்கள். பொதுவாக சாதாரணமாக மழைப் பொழிவு இருந்தாலும், ஓர் ஆண்டிற்கு சில மாதங்களிலும், சில பகுதிகளிலும் பற்றாக்குறை இருக்கும். கூடுதலான மற்றும் காலம் தவறிப் பெய்யும் மழையாலும் பாதிப்புகள் உண்டு. வெள்ளங்களினால் பேராபத்து ஏற்படலாம். 2014இல் பருவ மழை இயல்பாக இருந்தாலும் ஒன்பது மாநிலங்களில் வெள்ளம் ஏற்பட்டது. பீகார் நதிகளில் வெள்ளம் ஏற்பட்டபோது, ஐந்து இலட்சம் மக்களும் மூன்று இலட்சம் ஹெக்டேர் விவசாய நிலங்களும் பாதிக்கப்பட்டன.

விலையில் ஏற்றத் தாழ்வுகளாலும் விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள். சாதாரணமான சூழ்நிலைகளிலும், விவசாயிகள் அறுவடைக்குப்பின் விற்பனை செய்யவும் சில மாதங்களில் பாதிப்புகள் ஏற்பட்டு பிறகு விலைகள் உயர்கின்றன. அதற்காக விவசாயிகள் தங்களுடைய உற்பத்தியை விற்காமல் வைத்துக்கொள்ள முடியாது. அவர்களே பிறகு அதிக விலை கொடுத்து உணவுப் பொருட்களை வாங்க நேரிடுகிறது. குறைந்தபட்ச ஆதரவு விலையை அதிகரிப்பதன் மூலம் விவசாயிகள் அதிக உணவு பொருட்களை உற்பத்தி செய்து அவர்களுக்கு நல்ல விலை கிடைக்கும். ஆனால், இந்த நிலை தொடர அரசு போதுமான அளவு கொள்முதல் செய்ய வேண்டும்., அதிக உணவுப் பொருட்கள் உற்பத்தியால் விலைகள் சரிகின்றன. 2016-17இல் பருப்பு வகைகளின் அதிக உற்பத்தியால் குறைந்த பட்ச ஆதரவு விலை குறைக்கப்பட்டும் விலைகள் சரிந்தன. பொருட்களின் தேவைகளின் ஏற்றத்தாழ்வுகளும் உலகளாவிய போட்டியாலும், விவசாய பொருட்களின் நிச்சயமற்றத் தன்மை நிலவுகிறது.

Exit mobile version