Vivasayam | விவசாயம்

திருந்திய நெல் சாகுபடி- செம்மை நெல் சாகுபடி

நம் நாட்டில் தற்போது நிகழ்ந்து வரும் வரட்சி மற்றும் உணவு பற்றாக்குறை போன்றவற்றை சரிசெய்ய குறைந்த முதலீடு மற்றும்  குறைந்த தண்ணீரில் அதிக மகசூல் பெற கொண்டுவரப்பட்ட திட்டமே திருந்திய நெல் சாகுபடி ஆகும்.  இதனை ஆங்கிலத்தில்  SRI என்று அழைப்பர். இதன் தாயகம் மடகாஸ்கர் ஆகும். இந்த முறையில் நெல் சாகுபடி செய்வதற்கு தேவையான முறைகளை பயிர்சாகுபடி முறையே கீழே பட்டியலிட்டுள்ளேன்…
 
நாற்றங்கால் தயார் செய்தல்.. 
விதை தேவை:
ஒற்றை நாற்று முறை நடவுக்கு 5-7 கிலோ/ha.
இரண்டு நாற்று நடவுக்கு 12-15 கிலோ/ ha
 
நாற்றங்கால் தயார் செய்தல்:- 
 ஒரு எக்டர் சாகுபடி செய்வதற்கு தேவையான நாற்றங்கால் அளவு 100 sq.m ஆகும்.
 முதலில் பாலித்தின் பைகளை நிலத்தில் விரிக்க வேண்டும். பின் மண் 70% + 20% சான எரு+ 10% நெல் உமி கொண்ட களவையை அந்த பாலித்தீன் பைமேல் 1m×1m பரப்பளவு மற்றும் 4cm ஆழம் கொண்ட சட்டத்தை வைத்து பரப்ப  வேண்டும்.
 நாற்றங்காளில் 2கிலோ அசோஸ்பைரிலமும் 5 கிலோ VAM பூஞ்சாணமும் தெளிக்க .
 
விதை நேர்த்தி:
24 மணி நேரம் ஒரு கோணிப்பையில் கட்டி  விதையை நன்கு ஊரவைக்க வேண்டும். பின் தண்ணீரில் இருந்து வெளியே எடுத்து ஒரு இருண்ட அறையில் 24 மணி நேரம் வைத்திருக்க வேண்டும். பின் 1கிலோ அசோஸ்பைரிலமும் 1கிலோ பாஸ்போபாக்டீரியாவும் தண்ணீரில் கலந்து விதையுடன் 4 மணி நேரம் நிழலில் வைத்திருக்க வேண்டும். பின் தண்ணீரை வடிகட்டிவிட்டு விதையை நாற்றங்காலில் தூவ வேண்டும்.
 
நாற்றங்கால் மேலாண்மை:
பூவாலியை வைத்து முதல் 5 நாட்களுக்கு தண்ணீர் தெளிக்க வேண்டும். பின் வரும் நாட்களில் நாற்று பாயை சுற்றி குறைந்த அளவு தண்ணீர் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.15 நாட்கள் கழித்து நாற்றினை எடுத்து வயலில் நட வேண்டும்.
 
சாகுபடி நிலம் தயாரிப்பு முறை:
 
நாம் இந்தமுறைக்கும் வழக்கமாக தயார் செய்வது போலவே நிலம் தயார் செய்ய வேண்டும். அடியுரமாக 12.5 டன் தொழுவுரம் கொட்ட வேண்டும். பின் பசுந்தாள் உரங்கள் கொடுக்க வேண்டும்.
 
நாற்று நடுதல்:
 இடைவெளி: 25cm×25cm
 
தண்ணீர் பாய்த்தல்:
 முதல் 30 நாட்களுக்கு 2.5cm அளவும் பின்வரும் நாட்களில் 5cm அளவும் வயலில் தண்ணீர் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
 
களை எடுத்தல்:
கோனோவீடரை பயன் படுத்தி 10  நாட்கள் இடைவெளியில் களை எடுக்கலாம்.
 
உர மேலாண்மை:
 மண் பரிசோதனைக்கு ஏற்ப உரமிட வேண்டும்.  அல்லது குறைந்த நாட்கள் வயதுடைய ரகங்களுக்கு 120:40:40 என்ற விகிதத்திலும் மத்திய மற்றும் நீண்ட நாட்கள் வயதுடைய ரகங்களுக்கு 150:50:50 என்ற விகிதத்திலும் தலை,மணி,சாம்பல் சத்துக்களை மூன்று முறை பிரித்து வழங்க வேண்டும். LCC என்று சொல்லப்படும் இலை நிற அட்டையை வைத்து இலையில் நிறத்திற்கு ஏற்ப பயிரில் சத்துகுறைபாடு அறிந்து தேவையான சத்துக்களை கொடுக்கலாம்.
 
பூச்சி மேலாண்மை:
மூலிகைப்பூச்சி விரட்டிகளையும் இனக்கவர்ச்சிப் பொறியையும், விலக்குப்பொறியையும் பயன்படுத்தி பூச்சிகளை விரட்டலாம்.
 
அறுவடை:
பயிரின் வயதினைப் பொருத்து அறுவடைக்கு 10 நாட்களுக்கு முன்பே தண்ணீர் பாய்ச்சுவதை நிறுத்த வேண்டும்.
 
மகசூல்:
இந்தமுறையில் சாகுபடி செய்வதன் மூலம் 20% முதல் 70% வரை மகசூலை அதிகரிக்கலாம்…
 
எ.செந்தமிழ்,
இளங்கலை வேளாண் மாணவர்,
விழுது – வளரும் பத்திரிக்கையாளர் திட்டம்
Exit mobile version