Site icon Vivasayam | விவசாயம்

தேசிய நீரியல் திட்டத்திற்கு உலக வங்கி நிதியுதவி!

 

பெருவெள்ளம், மழை மற்றும் வறட்சி போன்றவற்றை முன்கூட்டியே கணித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது மற்றும் அத்தகைய சூழல்களில் ஏற்படும் பேரிடர்களைத்தடுப்பது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட தேசிய  நீரியல் திட்டத்திற்கு மறுகட்டமைப்பு மற்றும் மேம்பாட்டிற்கான சர்வேதச வங்கி 175 மில்லியன்களை கடனாக அளிக்கவுள்ளது.

தேசிய நீரியல் திட்டம்

இத்திட்டத்திற்கு மத்திட அமைச்சரவை 2016 ஏப்ரலில் ஒப்புதல் அளித்தது 3679 கோடி மதிப்பிலான இத்திட்டம் உலகவங்கி நிதியுதவியோடு செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் தேசிய நீர்  தகவலியல் மையம் எனும் அமைப்பு உருவாக்கப்பட்டு தேசிய அளவிலான நீர்வளங்கள் பற்றிய விவரங்கள் இதில் சேர்க்கப்படும். இதனால் நீர்வளங்களைப் பாதுகாப்பது எளிதாவதுடன் அதனைப் பயன்படுத்துவதும் எளிதாகும்.மேலும் இதன் மூலம் வெள்ளம்,பேரிடர்,வறட்சி உள்ளிட்டவை குறித்த முன்னறிவிப்புகளை வெளியிட இயலும். இதனால் வருடத்திற்கு சுமார் 70 மில்லியன் நிதி விரயமாவது தடுக்கப்படும்.

Exit mobile version