Site icon Vivasayam | விவசாயம்

பூச்சி விரட்டி – வசம்பு

திருஷ்டி விழுந்துவிடக்கூடாது என்பதற்காக குழந்தைகளில் கன்னத்தில் வட்டமாக கருப்பு நிறத்தில் ஒரு பொட்டு வைப்பார்கள். ஆனால் அது திருஷ்டி விழக்கூடாது என்பதற்காக மட்டுமல்ல,புதிதாக பிறந்த குழந்தைகளின் ரத்தத்னை உறிஞ்ச வரும் கொசு போன்ற ரத்த உறிஞ்சிகள் கன்னதில் கடிக்கும்போது வரும் கசப்பு கொசுக்களை குழந்தைகள் பக்கம் வராதபடி செய்யும் என்பதற்காக வைப்பார்கள்.

உண்மையில் வசம்பு ஒரு கிருமி நாசினி என்பதுடன் சிறந்த பூச்சிவிரட்டி. உங்க வீட்டில் கொசு அதிகம் இருக்கும் இடத்தில் வசம்பு மற்றும் வேப்பப்புண்ணாக்கினை சேர்த்து எரித்தால் கொசுக்கள் உள்பட சிறிய சிறிய பூச்சிகள் அந்த பக்கம் தலைவைத்துக்கூட படுக்காது . இது அனுபவ அறிவில் நாம் கண்டது. சாக்கடை அதிகம் உள்ள இடங்களில் மாலை நேரத்தில் வசம்பினையும், வேப்பபுண்ணாக்கினையும் வைத்து புகைப்போட்டால் நிச்சயம் சிறிய சிறிய பூச்சிகள் அண்டாது.
நீங்கள் இதை நீங்களும் முயற்சித்துப்பார்க்கலாம் முயற்சித்து பார்த்துவிட்டு எங்களுக்கும் தெரியப்படுத்தலாம்

Exit mobile version