Site icon Vivasayam | விவசாயம்

பேசத்தெரியாத நம்மாழ்வார்கள்

மாட்டுச்சாணத்தில் காய்கறி விதைகளை வைத்து வரட்டி தட்டி பலமாதங்கள் முளைப்புதிறன் மற்றும் பூச்சிகள் வராமல் பாதுகாக்க முடியும்… மேலும் சாணத்தின் உயிர்சத்து அதன் முளைப்பு திறனையும் அதிகரிக்கச்செய்கிறது என்று எனக்கு சொல்லிக்கொடுத்த எனது ஆத்தா… வுக்கு விவசாயத்தில் பிஎஸ்சி படிக்க வசதியோ வாய்ப்போ இல்லை. இருந்திருந்தால் கண்ட கண்ட விசங்களை கலக்கி மண்புழுக்களை கொல்லும் சுற்றுசூழலை மாசுபடுத்தும்… விவசாய மந்திரிகளை கோடீசுவர்களாக பல தலைமுறைக்கு மாற்றிய செயற்கை உரங்களையும் யூனியன் கார்பைடு போன்ற விசவியாபாரிகளின் பொருட்களையும் கூச்சம் நாச்சம் எல்லாமல் எல்லாருக்கும் பரப்பும் வேலையை செய்திருப்பார். ஆனால் என் ஆத்தாவோ பள்ளிக்கூடமே போனத்கில்லையே !! அவர் உபயோகித்த எல்லாமே விசத்தன்மையில்லா உரங்கள், பூச்சிவிரட்டிகள் மட்டுமே. அவர் விஞ்ஞானியா என்று தெரியாது… அனால் மண்ஞானி. படிச்சவன் பாட்டை கெடுத்தான்…. எழுதுனவன் ஏட்டைக்கெடுத்தான் என்ற பழமொழி ஞாபகம் வருவதை தவிர்க்க முடியவில்லை. லட்சக்கணக்கான பேசத்தெரியாத நம்மாழ்வார்கள் வாழ்ந்து வந்த பூமி தமிழகம். ( http://timesofindia.indiatimes.com/city/chennai/Soil-fertility-in-Tamil-Nadu-reduced-by-half-in-30-yrs-says-govt-paper/articleshow/47697599.cms?from=mdr) இப்போது அரசாங்கமும் அறிவியலும் கோரசாக சொல்கின்றன நமது மண்ணின் அங்ககச்செல்வங்கள் கடந்த முப்பது ஆண்டுகளில் பாதியாகி விட்டது என !! நம் படிக்காத முன்னோர்கள் பல ஆயிரம் வருடங்களாக காப்பாற்றிய மண்வளத்தை 30 ஆண்டுகளில் பாதியாக்கிவிட்ட அறிவாளிகள் நாம் 🙂

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral

Exit mobile version