Site icon Vivasayam | விவசாயம்

வேப்பங்கொட்டை கரைசல் தயாரிப்பு முறை..!

நன்றாக உலர்ந்த வேப்பங்கொட்டைகள் – 5 கிலோ

தண்ணீர் (நல்ல தரமான) – 100 லிட்டர்

சோப்பு – 200 கிராம்

மெல்லிய மஸ்லின் வகை துணி – வடிகட்டுவதற்காக

செய்முறை

தேவையான அளவு வேப்பங்கொட்டைகளை (5 கிலோ) பவுடராகும் வரை அரைக்க வெண்டும்.

இரவு முழுவதும் பத்து லிட்டர் தண்ணீரில் ஊறவைக்க வேண்டும்.

மரத்தாலான கரண்டியைக் கொண்டு காலை நேரத்தில், கரைசல் நிறம் பால் போன்ற வெண்மையாகும் வரை நன்றாகக் கலக்கி விட வேண்டும்.

இரண்டு அடுக்கு மெல்லிய மஸ்லீன் துணியைக் கொண்டு கரைசலை வடிகட்டி அதன் அளவை நூறு லிட்டராக ஆக்க வேண்டும்.

இதனுடன் 1 சதவிகிதம் சோப்பு சேர்க்க வேண்டும்.

எப்பொழுதும் புதிதாக தயாரித்த வேப்பங்கொட்டை கரைசலையே பயன்படுத்த வேண்டும்.

மதியம் 3.30 மணிக்கு பின்பு வேப்பங்கொட்டை கரைசலை தெளிப்பது மிகுந்த பலனைக் கொடுக்கும்.

வளர்ச்சியூக்கி

மிக எளிதான வளர்ச்சியூக்கி.

கடையில் அழுகும் நிலையில் அல்லது அழுகிய பழங்களை (வாழை, பப்பாளி, சீதா பழம், பரங்கிபழம் ) வாங்கி வந்து நன்றாக பிசைந்து அதனுடன் 1கிலோவிற்கு 1/2 கிலோ என்ற அளவில் நாட்டுச்சக்கரை (வெல்லம்) சேர்த்து நன்றாக கலக்கி ஒரு பிளாஸ்டிக் டிரம்மில் / பிளாஸ்டிக் வாளியில் மூடி வைக்கவும், 15 நாட்கள் நன்றாக நொதிக்க விட வேண்டும், இடைப்பட்ட நாட்களில் காலையும்., மாலையும் நன்கு கிளறி விட வேண்டும்.

15வது நாள் அக்கரைசலை வடிகட்டி 1லிட்டருக்கு 10லிட்டர் தண்ணீர் சேர்த்து ஸ்பிரே செய்தால் நல்லதொரு வளர்ச்சி கண்கூட தெரியும். இதனால் பயிர்களுக்கு இலை வழி ஊட்டம் கிடைக்கும்.

நன்றி

என். மதுபாலன்,B.sc (Agri),

இயற்கை வேளாண்மை ஆலோசகர்,

தர்மபுரி.

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral

விளம்பரம்

“அனைவருக்கும் இலவச இணையதளம்” என்ற திட்டத்தின் கீழ்
கிருஷ்ணகிரியை சேர்ந்த Clouds India நிறுவனம் வழங்குகிறது “இலவச இணையதள இடம்”

ஆம்,
“சொந்த இணையதளம் உலகையே சொந்தமாக்கும்”

மேலும் விபரங்களுக்கு
https://cloudsindia.in/
Mobile No : 9943094945

நேரடியாக பதிவு செய்ய
https://goo.gl/w5HlKV

இந்த சலுகையை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள்..

Exit mobile version