Site icon Vivasayam | விவசாயம்

ஆடாதொடை மணப்பாகு செய்வது எப்படி..?

டானிக் அல்லது சிரப் போன்றவற்றுக்கு மாற்றாகச் சித்த மருத்துவத்தில் கொடுக்கப்படுவது மணப்பாகு. மணம் கூடிய பாகு என்பதுதான் மணப்பாகு. ஆடாதொடை மணப்பாகு சளி, இருமலுக்கு அற்புதமான திரவ மருந்து.

ஆடாதொடை இலையை 1 கிலோ எடுத்துக் கழுவி சிறிது சிறிதாக நறுக்கி, ஒரு பாத்திரத்தில் இட்டு 6 லிட்டர் தண்ணீர் சேர்த்து அடுப்பிலேற்றிக் கொதிக்கவிட வேண்டும். தண்ணீர் ஒன்றரை லிட்டராகச் சுண்டிய பிறகு, 1 கிலோ பனைவெல்லம் அல்லது நாட்டுச் சர்க்கரை சேர்த்து பாகுபதத்துக்குக் காய்ச்சி, வேறு பாத்திரத்துக்கு மாற்ற வேண்டும். பாத்திரம் மாற்றாவிட்டால் பாகு இறுகிவிடும். இது நன்கு ஆறினால், அதுதான் ஆடாதொடை மணப்பாகு, இதைப் பாட்டில்களில் காற்றுப் புகாதவாறு அடைத்துப் பத்திரப்படுத்த வேண்டும். ஓர் ஆண்டு வரை இது கெடாது.

ஆடாதொடை வளர்ப்பு முறை

ஆடாதொடையை வீட்டுத் தோட்டத்தில் கூட எளிதாக வளர்க்கலாம். ஆடாதொடைக் குச்சிகளை வெட்டி, செம்மண் நிரப்பிய பாலிதீன் பையில் வைத்துத் தண்ணீர் தெளித்து வந்தால், 21 நாட்களில் துளிர்த்துவிடும். இப்படி இரண்டு மாதங்கள் வைத்திருந்து நடவு செய்யலாம். தொட்டிகளிலும் இதை வளர்க்கலாம்.

நன்றி

பசுமை விகடன்

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral

Exit mobile version