Site icon Vivasayam | விவசாயம்

மீன் வளர்ப்பு : குளம் தயாரிப்பு முறை..!

குளம் தயாரிப்பு!

குளம் தயாரிப்பு குறித்துப் பேசிய ரங்கநாதன், “ஒரு ஏக்கர் பரப்பில் 8 அடி ஆழத்துக்குக் குளம் வெட்ட வேண்டும். ஒரு குளத்துக்கு 100 கிலோ வீதம் கிளிஞ்சல் சுண்ணாம்பு போட்டு, 2 அடி உயரத்துக்குத் தண்ணீர் விட வேண்டும். பிறகு, 2 டன் ஈரச் சாணத்தைத் தண்ணீரில் கரைத்து மேலும் 2 அடி உயரத்துக்குத் தண்ணீர் விட வேண்டும். அடுத்த ஒரு வாரத்தில் தேவையான அளவு தாவர நுண்ணுயிரிகள் உருவாகியிருக்கும்.

உள்ளங்கையைத் தண்ணீருக்குள் விட்டுப் பார்க்கும்போது மங்காலகத் தெரிந்தால், போதுமான அளவு நுண்ணுயிரிகள் உருவாகிவிட்டன என்று தெரிந்துகொள்ளலாம். அப்படி இல்லாமல் வெளுப்பாகத் தெளிவாகத் தெரிந்தால், இன்னமும் ஈரச் சாணத்தைக் கரைத்துவிட வேண்டும்.

தாவர நுண்ணுயிரிகள் உருவான பிறகுதான் மீன் குஞ்சுகளைக் குளத்துக்குள் விட வேண்டும். தொடர்ந்து மாதம் 400 கிலோ ஈர சாணத்தைக் கரைத்து விட்டு வர வேண்டும். அனைத்து மீன்களையும் பிடித்த பிறகு, குளத்திலிருந்து தண்ணீரை முழுமையாக வெளியேற்றி, 15 நாட்கள் வெயிலில் குளத்தை காய விட வேண்டும். பிறகு மீண்டும் இதே முறையில் தண்ணீர் விட்டு தயார் செய்ய வேண்டும்” என்றார்.

ஹாப்பா!

“மீன் குஞ்சு விற்பனை நிலையங்களில் தீவனத்துக்கான ‘வெலான் ஸ்கிரீன் ஹாப்பா’ (Velon Screen Happa P 16) மற்றும் மீன் இருப்பு செய்வதற்கான மூடியுடன் கூடிய ஹாப்பா ஆகியவை கிடைக்கின்றன. குறிப்பாகத் தஞ்சாவூர் மாவட்டம் கரந்தை, கடலூர் மாவட்டம் சிதம்பரம் போன்ற பகுதிகளில் இந்த ஹாப்பாக்கள் கிடைக்கின்றன. தீவன ஹாப்பாவின் விலை 750 ரூபாய், இவை இரண்டு ஆண்டுகள் வரை தாங்கும்.

1 மீட்டர் நீளம், 1 மீட்டர் அகலம், 1 மீட்டர் உயரம் கொண்ட ‘வெலான் ஸ்கிரீன் ஹாப்பா p(16)’ங்கற வலைத் தொட்டியில பரவலா இருக்குறதால, ஒரே சமயத்துல எல்லா மீன்களும் உறிஞ்சி எடுத்துக்கும். குளத்தோட ஆழமான பகுதியில நாலு சவுக்குக் கம்புகளை நட்டு, அதுலதான் ஹாப்பா அமைச்சிருக்கோம். பாதியளவு தண்ணீர்க்கு உள்ளேயும் பாதியளவு தண்ணீருக்கு மேலயும் இருக்குற மாதிரி ஹாப்பா அமைச்சிருக்கோம். ஒரு ஏக்கர் குளத்துல வளரும் மீன்களுக்கு… வளர்ப்புக் குளத்துல விட்ட முதல் 15 நாட்களுக்குத் தினமும் 3 கிலோ தீவனம் கொடுப்போம். அடுத்த 15 நாட்களுக்குத் தினமும் நாலரை கிலோ கொடுப்போம்.”

நன்றி

பசுமை விகடன்

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral

Exit mobile version