Site icon Vivasayam | விவசாயம்

மாடுகளுக்கான சமவிகித உணவு !

ஒரு மாட்டுக்கு தினமும் 20 கிலோ பசுந்தீவனம், 15 கிலோ உலர்தீவனம், ஒரு கிலோ அடர்தீவனம் கொடுக்க வேண்டும். கறவை மாடாக இருந்தால், அது கொடுக்கும் ஒவ்வொரு லிட்டர் பாலுக்கும் அரைகிலோ வீதம் கூடுதலாக அடர்தீவனம் கொடுக்கவேண்டும்.

அடர்தீவனத்தில் நார்ச்சத்து உடைய தவிடு, உளுந்துப் பொட்டு, துவரைப் பொட்டு வகைகள் 45-50 சதவிகிதமும், மாவுச்சத்து உடைய அரிசி, கம்பு, சோளம் ஆகியவற்றின் மாவு 25-30 சதவிகிதமும், புரதச்சத்து உடைய பிண்ணாக்கு வகைகள் 15-20 சதவிகிதமும் இருக்கவேண்டும். அவற்றோடு தலா ஒரு சதவிகிதம் கல் உப்பு, தாது உப்புக்கலவை ஆகியவையும் இடம்பெற வேண்டும்.

நன்றி

பசுமை விகடன்

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral

Exit mobile version