Site icon Vivasayam | விவசாயம்

அதிக மகசூல் கொடுக்கும் புதிய ரகங்கள் !

கம்பு கோ-10 ரகம்

இது, 85-90 நாட்கள் வயது கொண்ட பயிர். ஒரு ஹெக்டேருக்கு இறவையில் 3,526 கிலோவும் மானாவாரியில் 2,923 கிலோவும் மகசூல் கொடுக்கும். பி.டி-6029, பி.டி-6033, பி.டி-6034, பி.டி-6039, பி.டி-6047 ஆகிய ஐந்து ரகங்களில் இருந்து உருவாக்கப்பட்டது. இறவை சாகுபடிக்கு சித்திரை, மாசிப் பட்டங்கள் ஏற்றவை. மானாவரிக்கு ஆடி, புரட்டாசிப் பட்டங்கள் ஏற்றவை. தமிழ்நாடு முழுவதும் பயிரிட ஏற்ற பயிர். அடிச்சாம்பல் நோய்க்கு அதிக எதிர்ப்புச் சக்தி கொண்டது. அதிக அளவு புரதச்சத்து (12.07 சதவிகிதம்) கொண்டது. நெருக்கமான கதிர்கள் மற்றும் திரட்சியான விதைகள் இருக்கும்.

உளுந்து [வம்பன்-8]

65-75 நாட்கள் வயது கொண்டது. ஹெக்டேருக்கு 900 கிலோ மகசூல் கொடுக்கும். வி.பி.என்-6 மற்றும் கோ-6 ரகங்களை விட முறையே 11.94 மற்றும் 13.49 சதவிகிதம் அதிக மகசூல் கொடுக்கக்கூடியது. வம்பன்-3, வி.பி.என் – 04-008 ஆகிய ரகங்களில் இருந்து உருவாக்கப்பட்டது. ஆடி, புரட்டாசி, தை பட்டங்கள் ஏற்றவை. நீலகிரி மற்றும் கன்னியாகுமரி தவிர தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் பயிரிட ஏற்றது. ஒரே தருணத்தில் பயிர் முழுவதும் முதிர்ச்சியுறும். விதைகள் உதிராது. மஞ்சள் தேமல் மற்றும் இலைச்சுருள் நோய்களை எதிர்க்கும்திறன் கொண்டது.

நன்றி

பசுமை விகடன்

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral

Exit mobile version