Vivasayam | விவசாயம்

பருவநிலை மாற்றத்தால் 115 மாவட்டங்களில் விவசாயம் அபாயக்கட்டம்!!

இந்திய அறிவியல் கழகம் சமீபத்தில் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் பருவநிலை மாற்றத்தில் இந்தியாவில் உள்ள 29 மாநிலங்களில், 15 மாநிலங்களில் 115 மாவட்டங்களில் விவசாயம் மிகவும் அபாயக்கட்டத்தில் உள்ளதாக தெரிவிக்கிறது.

top10

பருவ நிலை மாற்றம் என்பது ஒவ்வொரு பருவத்திலும் சராசரியாக உள்ள மழை, வெப்பம், காற்று ஆகியவையில் ஏற்படும் குறைந்த மற்றும் உச்சப்பட்ச மாற்றங்களே பருவநிலை மாற்றம் ஆகும். உதாரணத்திற்கு நல்ல வெயில் காலத்தில் சாரசாரிக்கும் அதிகமான மழைபொழிவு, நல்ல மழைக்காலத்தில் கொளுத்தும் வெயில் போன்றவையே.

புவி வெப்பமயமாதலுக்கு பல்வேறு காரணிகள் காரணங்களாக இருந்து வருகிறது.

அதிகரிக்கும் சூரிய வெப்பம், புவி சூழற்சியில் ஏற்படும் மாற்றங்கள், எரிமலை வெடிப்பு, பனி உருகுதல், கடலின் மாறுபடும தன்மை, இயந்திரமயமாக்கலால் ஏற்படும் மாற்றங்கள் என எல்லாமே இயற்கை சங்கிலியை தொடர்ந்து வருகிறது.

இதுபோன்ற பருவ மாற்றங்களில் உலகில் பல்வேறு சிக்கல்கள் நமக்கு ஏற்படும். அந்த வகையில்தான் இந்தியாவில் உள்ள 572 மாவட்டங்களில் இருந்து தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாக அவற்றை 5 வகைகளாக வரிசைப்படுத்தி உள்ளது. மிகவும் அபாயக்கட்டம், அபாயம், ஓரளவு அபாயம், குறைந்த அபாயம் மற்றும் எச்சரிக்கை என்று வகைப்படுத்தியுள்ளனர்.

இந்த ஆய்வுகள் 38 வகையான காரணிகள் மூன்று வகைகளில் உள்ளடக்கப்பட்டது.

நிலை, விளைவு, தகவமைப்பு மற்றும் வீச்சு, வறண்ட நிலம், ஆண்டு மழைவிகிதம், புயல்காற்று, சூறாவளி, வறட்சி போன்ற காரணிகள் கொண்டு ஆய்வுகள் நிகழ்த்தப்பட்டுள்ளன.

உதாரணத்திற்கு கர்நாடகாவில் உள்ள தேவங்கிரி மாவட்டம் அதிகபட்ச வெப்பநிலை, குறைந்த மழைப்பொழிவு, குறைந்த நிலத்தடிநீர் ஆகிய காரணங்களால் இந்த மாவட்டத்தில் விவசாயம் மிகவும் அபாயக்கட்டத்தில் உள்ளதாக ஆய்வு தெரிவிக்கிறது.

இந்த ஆய்வறிக்கையின் அடிப்படையில் மிகவும் அபாயக்கட்டம் மற்றும் அபாயநிலையில் 121 மாவட்டங்கள் உள்ளதாக அலோக் கிக்கா தெரிவித்துள்ளார். அலோக் கிக்கா பன்னாட்டு நீர் மேலாண்மை கழகத்தில் முதன்மை ஆராய்ச்சியாளராக உள்ளார். இந்தியாவின் மேற்கு மாநிலம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் விவசாயம் மிகவும் அபாயக்கட்டத்தில் உள்ளதாக இந்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ராஜஸ்தான் மாநிலத்தில் அதிகபட்சமாக 25 மாவட்டங்களில் விவசாயம் மிகவும் அபாயகரமாக உள்ளதாக தெரிவிக்கிறது. மேலும், குஜராத், மத்திய பிரதேசம், கர்னாடகா, மகாராஷ்டிரா, ஆந்திர பிரதேசம், தமிழ்நாடு மற்றும் உத்திர பிரதேசம், பீகார் ஆகிய மாநிலங்களிலும் அபாயக்கட்டம் மற்றும் அபாய நிலையில் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் விவசாயம் சம்பந்தமான ஆய்வுகளை மேற்கொண்டு கணித்திருப்பது நமக்கு ஒரு சாதகமான அம்சமாகும்.

இந்த ஆய்வு நமக்கும், எதிர்காலத்தில் நாம் சந்திக்க விரும்பும் பிரச்சனைகளுக்கு தீர்வுகளை நோக்கி பயணிக்க விரும்பும் ஒரு ஆய்வாகவும் இருக்கும்.

தமிழகத்தில் குறைந்த வரும் நிலத்தடி நீர்மட்டம், வெப்ப நிலை, மழை பொழிவு போன்ற காரணங்களால் விவசாயம் சற்றே அபாயத்தில் உள்ளது. இப்போதிருந்தே நாம் அரசாங்கம் செய்யும் என்று இல்லாமல் நாமே நம்மால் ஆன முயற்சிகளை எடுக்கவேண்டும்.

நிலத்தடி நீர் மட்டம் உயர்த்துவதற்கான வழிமுறைகளை ஏதேனும் இருந்தால் editor.vivasayam@gmail.com என்ற முகவரிக்கு அனுப்புங்கள். உங்கள் பெயரோடு செய்திகள் பதியப்படும்..

தகவல் : செல்வ முரளி

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral

Exit mobile version