Site icon Vivasayam | விவசாயம்

மொட்டை மாடியில் கோழி வளர்க்கும் முறை !

ஒரு சேவல், நாலு கோழிகள் இருந்தால் போதும். அது மூலமா முட்டை எடுத்து குஞ்சு உற்பத்தி பண்ணி விற்பனை செய்வது மூலமாக, மாதம் குறைந்த பட்சம் 10 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கலாம். இதற்கு அதிகமான இட வசதி கூட தேவையில்லை. வீட்டு மொட்டைமாடியில் கூட வளர்க்க முடியும். எல்லா கோழிகளும் ஒரே நேரத்துல முட்டை வெக்காது. ஒண்ணு முட்டை வைக்கும்போது ஒண்ணு அடையில இருக்கும். இன்னொன்னு குஞ்சுகளோட இருக்கும். அதனால, சுழற்சி முறையில மாசா மாசம் நமக்கு குஞ்சுகள் கிடைச்சுகிட்டே இருக்கும். கோழிக்குப் பொதுவா, முட்டையிடும் காலம் 15 நாள்.

அடைகாக்கும் காலம் 22 நாள். குஞ்சுகளோட இரண்டு மாதம் இருக்கும். ஆக ஒரு சுத்துக்கு மூன்று மாதம் ஆகும். நல்லா பராமரிச்சா ஒரு சுத்துல பத்து குஞ்சுகள் வரை எடுத்துடலாம். அதில் எப்படியும் எட்டு குஞ்சுகள் தேறிடும். சராசரியா ஆறு குஞ்சுகள் கண்டிப்பாக கிடைக்கும்.

குஞ்சுகளை இரண்டு மாதம் வளர்த்து விற்பனை செய்யலாம்.

பராமரிப்பு மற்றும் தீவனம்!

வெளியே மேய விட வாய்ப்பு இருப்பவர்கள், மேய விட்டு வளர்க்கலாம். அதுக்கு வசதி இல்லாதவங்க, கூண்டுல அடைச்சு கம்பு, சோளம் மாதிரியான தானியங்களைக் கொடுக்கலாம். சேவலை பெரிசா வளர்த்து விற்பனை செய்ய நினைக்கிறவங்க, கட்டி வெச்சு தீவனம் கொடுத்து வளர்க்கணும். அந்த மாதிரி சேவல்களுக்கு கடலைப்பருப்பு, பாதாம் மாதிரியான சத்தான பொருட்களை வாங்கிக் கொடுக்கணும். தினமும் கழிவுகளை கூட்டி சுத்தப்படுத்த வேண்டும். வெள்ளைக்கழிசல் நோய்க்கு கண்டிப்பாக தடுப்பூசி போடணும். மத்தபடி எந்த பராமரிப்பும் தேவையில்லை.

நன்றி

பசுமை விகடன்

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral

Exit mobile version