Site icon Vivasayam | விவசாயம்

கரிசலாங்கண்ணி கீரை (Eclipta prostrate)

சித்தர் பாடல்

குரற்கம்மற் காமாலை குட்டமொடு சோபை

யுற்றபாண்டு பன்னோ யொழிய – நிரற் சொன்ன

மெய்யாந் தகரையொத்த மீளிண்ணு நற்புலத்துக்

கையாந் தகரையொத்தக் கால்.

                                      ( அகத்தியர் குணபாடம் )

பொருள்

தொண்டையில் ஏற்படும் நோய்கள், காமாலை, குஷ்டம், ரத்த சோகை, வயிறு ஊதிப்போதல் போன்ற பிரச்னைகளைத் தீர்க்கும் வல்லமை பெற்றது.

கரிசலாங்கண்ணியின் தன்மை

பித்த நீர்ப்பெருக்கி – Cholagogue

உரமாக்கி – Tonic

உடல்தேற்றி – Alterative

வாந்தி உண்டாக்கி – Emet

நீர்மலம் போக்கி – Purgative

வீக்கம் உருக்கி – Deobstruent

ஈரல் தேற்றி – Hepictonic

கல்லீரலைப் பலப்படுத்தக்கூடிய குணத்தால், மஞ்சள் காமாலை, சோகை போன்ற நோய்களுக்கு கரிசலாங்கண்ணி பயன்படுத்தப்படுகிறது.

கரிசலாங்கண்ணியில் இரண்டு வகைகள் உள்ளன. அவை:

  1. வெள்ளைக் கரிசலாங்கண்ணி
  2. மஞ்சள் கரிசலாங்கண்ணி

இதில், மஞ்சள் கரிசலாங்கண்ணி மிகவும் விசேஷமானது. இரண்டையுமே உணவாகச் சாப்பிடலாம். கரிசலாங்கண்ணியில் இரும்புச் சத்து அதிகமாக உள்ளது.

கரிசலாங்கண்ணிக் கீரையின் மருத்துவப் பயன்கள்

  1. கரிசலாங்கண்ணிக் கீரைச்சாறில் திப்பிலியை ஊறவைத்து உலர்த்திப் பொடியாக்கி, தினமும் காலையில் 2 கிராம் சாப்பிட்டால், கப நோய்கள், ஆஸ்துமாவால் ஏற்படும் மூச்சிரைப்பு போன்றவை குணமாகும்.
  2. கரிசலாங்கண்ணிக் கீரைச் சாறில் அதிமதுரத்தை ஊறவைத்து உலர்த்திப் பொடியாக்கி, தினமும் காலை மாலை இருவேளையும் 2 கிராம் அளவு தேனில் குழைத்துச் சாப்பிட்டால் இருமல், புகைச்சல் ஆகியவை சரியாகும்.
  3. கரிசலாங்கண்ணிக் கீரைச்சாறு (30 மி.லி), பருப்புக் கீரைச்சாறு (30 மி.லி) இரண்டையும் ஒன்றாகக் கலந்து தினமும் காலையில் சாப்பிட்டால் ஆரம்பநிலையில் உள்ள புற்றுநோய்கள் குணமாகும்.
  4. கரிசலாங்கண்ணிக் கீரைச்சாறில் நெல்லி முள்ளி, சீரகம் இரண்டையும் சம அளவு ஊறவைத்து உலர்த்திப் பொடியாக்கி, தினமும் காலை மாலை இருவேளையும் 2 கிராம் அளவு சாப்பிட்டால் இளநரை மறையும்.
  5. கரிசலாங்கண்ணிக் கீரையை மிளகு சேர்த்து அவித்துச் சாப்பிட்டால் கல்லீரல் வீக்கம், ரத்தச் சோகை போன்ற குறைபாடுகள் சரியாகும்.

100 கிராம் வெள்ளைக் கரிசலாங்கண்ணிக் கீரையில் உள்ள சத்துகள்

நீர்ச்சத்து – 81.1 கிராம்

புரதம் – 4.4 கிராம்

கொழுப்பு – 0.8 கிராம்

தாது உப்புகள் – 4.5 கிராம்

சர்க்கரைச்சத்து – 9.2 கிராம்

சுண்ணாம்புச்சத்து – 30.63 மி.கி

பாஸ்பரஸ் – 46.2 மி.கி

இரும்பு – 8.9 மி.கி

கலோரித்திறன் : 62 கலோரி

 

100 கிராம் வெள்ளைக் கரிசலாங்கண்ணிக் கீரையில் உள்ள சத்துகள்

நீர்ச்சத்து – 93.7 கிராம்

புரதம் – 1.1 கிராம்

கொழுப்பு – 0.2 கிராம்

தாது உப்புகள் – 1.4 கிராம்

நார்ச்சத்து – 0.4 கிராம்

சர்க்கரைச்சத்து – 3.2 கிராம்

சுண்ணாம்புச்சத்து – 39 மி.கி

பாஸ்பரஸ் – 10 மி.கி

இரும்பு – 3.9 மி.கி

கலோரித்திறன் : 19 கலோரி

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral

 

Exit mobile version