Site icon Vivasayam | விவசாயம்

மரபணு மாற்றப்பட்ட சோளத்திலிருந்து உயிரி எரிசக்தி !

புளோரிடா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், சுற்றுச்சூழலுக்கு உகந்த, பெட்ரோலியத்திற்கு இணையான உயிரி எரிபொருளை சோளத்திலிருந்து உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்..

மற்ற பயிர் வகைகளை ஒப்பிடும் போது, சோளத்திற்கு இரசாயன உர பயன்பாடு மிகவும் குறைவு எனவே, இந்த எரிபொருள் உற்பத்திக்கு சோளம் மிகவும் உகந்த பயிராகும்.

இந்த ஆராய்ச்சிப்படி, குறிப்பிட்ட மரபணுவை கொண்ட சோளம் உயிரி எரிசக்தியை உருவாக்க பெரிதும் உதவியாக இருக்கும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆராய்ச்சியினை (University of Florida in Gainesville, Washington State University in Pullman, the USDA-ARS in Lincoln, Nebraska, and the University of Missouri, Columbia.) ஆகிய பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த ஆய்வாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

ஆய்வாளர்கள் நோயெதிர்ப்பு, செல்சுவர் அமைப்பு மற்றும் மழை வெள்ளத்தை தாங்கி வளரும் ஆற்றலுடய தாவரமாக மரபணு மாற்றம் மூலம் புதுப்பிக்கத்தக்க எரிபொருளை உருவாக்கும் வகையில் மாற்றியுள்ளனர். குறிப்பாக பூஞ்சான நோய், நோயெதிர்ப்பை மேம்படுத்துதல் போன்றவை, குறைந்த சோள உற்பத்தி தேசமான தென்கிழக்கு அமெரிக்காவிற்கு மிகவும் உதவியாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.

இறுதியாக சோளத்தின் செல்சுவர் கலவை fermentable சர்க்கரைகளாக மாற்றிய பிறகு எத்தனால் போன்ற எரிபொருளாக உருவாக்கப்படுகிறது.

ஆய்வாளர்கள் பல்முறை அணுகுமுறைகளை பயன்படுத்தி மரபணு மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளனர்.. இந்த ஆய்வின் குறிக்கோள் என்னவென்றால் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை மேம்படுத்துவதே ஆகும்.

https://www.sciencedaily.com/releases/2016/07/160713100851.htm

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral

Exit mobile version