Site icon Vivasayam | விவசாயம்

மணத்தக்காளிக் கீரையின் மருத்துவ பயன்கள்

  1. கையளவு மணத்தக்காளிக் கீரையுடன் 4 சிட்டிகை மஞ்சளையும் சேர்த்து கொதிக்கவைத்துச் சாப்பிட்டால், வாய்ப்புண், நாக்குப் புண் போன்றவை குணமாகும்.
  2. மணத்தக்காளிக் கீரையுடன் சிறிதளவு உப்பு சேர்த்து சமைத்துச் சாப்பிட்டு வந்தால் நாள்பட்ட வாத நோய்கள் தீரும்.
  3. ஒரு கைப்பிடி மணத்தக்காளிக் கீரையுடன் ஒரு மாசிக்காயை சேர்த்து கஷாயமாகச் செய்து சாப்பிட்டு வந்தால், வாய்ப்புண், தொண்டைப்புண், வயிற்றுப்புண் குணமாகும்.
  4. ஒரு கைப்பிடி அளவு மணத்தக்காளிக் கீரையுடன், ஒரு ஸ்பூன் பார்லி, நான்கு சிட்டிகை மஞ்சள் ஆகியவற்றைச் சேர்த்து கஷாயமாகச் செய்து சாப்பிட்டால், நீர்ச் சுருக்கு, நீர் எரிச்சல், சிறுநீர் பிரியாமை போன்ற குறைபாடுகள் சரியாகும்.
  5. மணத்தக்காளிக் கீரையில் இருந்து சாறு எடுத்து, அதைத் தேனோடு சேர்த்து சர்பத் (Syrup) போல் காய்ச்சி, தினமும் சாப்பிட்டு வந்தால் இளைத்த உடல் பருக்கும்.
  6. ஒரு கைப்பிடி மணத்தக்காளிக் கீரையோடு மிளகு (10 எண்ணிக்கை), திப்பிலி (3 எண்ணிக்கை), நான்கு சிட்டிகை மஞ்சள் ஆகியவற்றைச் சேர்த்து விழுதாக அரைத்து அதில் சிறிது தேன் கலந்து சாப்பிட்டால், சளி, இருமல் போன்ற கப நோய்கள் குணமாகும். குளிர் ஜன்னிக்கு அற்புதமான மருந்து இது.
  7. மணத்தக்காளிக் கீரையில் இருந்து சாறு எடுத்து 30 மி.லி அளவுக்குத் தினமும் மூன்று வேளையும் சாப்பிட்டால், சிறுநீர் தாராளமாக பிரியும். பெருவயிறு, வாய்ப்புண், உடல் சூடு போன்றவை குணமாகும்.

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral

 

Exit mobile version