Site icon Vivasayam | விவசாயம்

விவசாயத்தை எளிதாக்கும் பொருட்களின் இணையம் (IoT)

விவசாயத் துறையில்தான் தொழில்நுட்பம் மிகமிகக் குறைவான அளவில் பயன்படுத்தப்பட்டுவந்தது. ஆனால் பொருட்களின் இணையம் (IoT) தொழில்நுட்பம் விவசாயிகளை மிக நுட்பமான விவசாயிகளாக மாற்றவுள்ளது.

ஆம் சென்சார்கள் எனப்படும் நுண்ணுணர்விகள் வழியாக விவசாயத்தை இன்னமும் மேம்படுத்தலாம். பெருகி வரும் தண்ணீர் பிரச்சனைக்கு பொருட்களின் இணையம் (IoT) இன்னொரு வரப்பிரசாதம் ஆகும். ஆம் இதற்கு முன் தண்ணீரை பொத்தாம் பொதுவாக பயிர்களுக்கு இறைத்துவிடுவோம். ஆனால், “பொருட்களின் இணையம்” உணர்வி மூலம் பயிர்கள் உள்ள மண்ணில் புதைத்து வைத்துவிட்டு வேரை கண்காணிக்கிறார்கள். எவ்வளவு தண்ணீர் வேண்டும். அதன் வேரில் உள்ள தண்ணீரின் அளவு என எல்லாம் கணக்கிடப்பட்டு எவ்வளவு தண்ணீர் வேண்டும் என்று நுண் உணர்விகளிலிருந்து வந்து சேர்ந்ததை அறிந்து தண்ணீரை நிறுத்தி விடலாம்.

இந்த ஆய்வின் நோக்கம் எப்படியாவது விவசாயத்திற்கு தேவைப்படும் தண்ணீர் பயன்பாட்டினை குறைத்து செலவழிப்பதுதான், அதாவது இப்போது செய்யும் தண்ணீர் செலவை விட 50% குறைத்து செலவிட வேண்டும் என்பதே. ஆனால் ஆய்வில் 75% தண்ணீர் பயன்பாடு குறைக்கப்பட்டுள்ளது. இது விவசாயி்களுக்கு ஒரு வரப்பிரசாதம்.

“பொருட்களின் இணையம்” தான் வரும்கால எதிர்காலம் , அது ஸ்மார்ட் ஹோம், ஸ்மார் வாகனங்கள், ஸ்மார்ட் போன் என எல்லாவற்றிலும் இனி பொருட்களின் இணையம்தான் ராஜாவாக இருக்கும்.

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral

Exit mobile version